பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 19.

காவின் சரியான நடுவிடத்தைத் தோளில் வைத்துச் சுமந்து செல்லலாம் : எளிதாக அமையும்.'

ஏன் சுமையைச் சரிபங்காக்க வேண்டும்? கூடுதல், குறைதல் இருந்தாலென்ன ? -

" கூடுதல் குறையாக இருப்பின் ஒரு பக்கம் இழுக் கும்; ஒரு பக்கம் உயர்த்தும். இதனுல் சுமக்க இயலாத தோடு தோளில் அமைந்த காவும் சரியும்; சுமைப் பொருளும் விணுகும் " -

சமபங்கு ஆக்கப்படுவதோடு காவையும் நடுவிடம் பார்த்து அமைக்க வேண்டுமோ ?”

" நடுவிடம் பார்த்துத் தூக்காது போகுல் சுமையின் ஏற்றத் தாழ்வால் நடக்க இயலாது. முன்னும் பின்னு மாகக் காலில் மோதும். சுமப்பவர் கீழே விழ நேரிடும். சுமைப் பொருளும் வீணுகும்.

சுமையைக் கூடுதல் குறையாகக் காவிலமைத்து அதற்கேற்பக் காவையும் நடுவிடம் அல்லாமல் அதிகச் சுமையுள்ள பக்கத்தைத் தோளின் பக்கத்திலும், சுமை யில்லாப் பக்கத்தைத் தொலைவிலும் வைத்துத் தூக்கிச் செல்லலாமே !

செல்லலாம். இதல்ை எளிமை யிராது. கையின்

வலிமையும் தேவைப்படும். பொருளும் சமமாய், இடமும் நடுவாய் அமையின் கையின் துணையில்லாமல்கூட தோள் எளிதில் தாங்கிச் செல்லும்.” -

ஆகையால்...'

" ஆகையால், காவால் சுமக்குங்கால் இருபக்கத்

தாலும், இருபக்கச் சுமையாலும் சமமான நிலை அமை வதே இனிது.” -