பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளுவர் வாழ்த்து

ஏன்...காவின் ஒரு பக்கத்திலேயே சுமைக்கட்டை ஒன்ருகவே பொருத்தித் தூக்கிளுல் என்ன ?

மகன் நகைத்தான் : "அந்தோ மிகக் கொடுமை யான முடிவைத் தரும்.” -

ஆம், கொடுமைதான். இந்தச் சுமக்கும் இனிமை யைப் பெற எத்துணை முன்னேற்பாடுகள் செய்யவேண்டி நேர்கின்றன. இன்ப வாழ்வு என்பதோ இதை நோக்க எத்துணைப் பெரிது! அவ்வாழ்வில் அமையும் இன்பச் சுமையை ஏற்கவேண்டுமாயின் எத்துணை முன்னேற் பாடுகளைச் செய்யவேண்டும் மகனே!" -

"ஆம் தந்தையே, சுமையைத் துக்குவதென்பது பொழுது போக்கா என்ன? பொறுப்பு வேண்டும் ; ஊக்கம் வேண்டும் ; உரம் வேண்டும்.'

காமத்தால் அடையவேண்டிய பயனை எய்த இத் துணையும்வேண்டியனவே. எல்லாவற்றையும்விடக் காத கிர் இருவரது அன்புவேட்கையும் ஒத்தனவாக அமைதல் வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பக்குவமறிந்து சம நிலையில் விரும்ப வேண்டும். இவ்வாறு அன்றி * ஒருவர் பக்கத்தே மட்டும் காமம் இடம்பெறுமாயின் அக் காமம் துன்பத்தையே தரும். அவ்வாறின்றிக் காவைப் போல் இருவர் பக்கமும் சமமான வேட்கை இடம்பெறு மாயின் சுமை எளிதாவதுபோன்று காமமும் இனிதாகும்’ என்ருர் அன்புத் தந்தை. -

" தந்தையே ஒத்த அன்பும், ஏற்றத்தாழ்வில்லாத காமமுமே வாழ்வில் இன்பத்தை நிலைக்கச் செய்வன வாகும். காமம் என்பது ஒரு பொழுதுபோக்குக்குரிய

SMMMMAMAAAS AAASASAAAAASA SAASAASAAAS *. షోజ>...

  • ஒருதலையான் இன்னுது காமம்; காப்போல

இருதலை யானும் இனிது.