பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 21

தன்று. ஆணும், .ெ ப ண் ணு ம் பொழுதுபோக்குக் கருவிகளுமல்லர். காவிலே சுமையை அமைப்பது பொழுதுபோக்காகாது. அதுபோன்று காதல் வாழ்வில் ஒத்த பொறுப்புணர்ச்சி இன்றியமையாதது என்பதை உணர்ந்தேன்' என்ருன் மகன்.

'மகனே, இதனை உணராதவர் பலர். அதனுல்தான் காமத்தின் பக்குவ நிலையையும், மென்மையையும் உணர்ந்து பயன்துய்த்தவர் சிலராய் உளர். சிலரில் இருவராம் நீவிர் உடலும் உயிருமாய் நட்புக் கொண்டு வாழ்க!” -- - -

உடலாய்-உயிராய் வாழ்க !

! மகனே, உடல் என்பது இயக்கமில்லாத பிண்டம். உயிரோ இயங்கவைத்து இயங்கும் இயக்கம். உடல் என்று தனித்து இயங்குவது ஒன்று இல்லை. உயிரும் தனித்தியங்குவதில்லை. உடலோடு சேர்ந்தால்தான் உயிர் பயன் தரும். உயிரில்லாத உடலோ பினம். உடலோடு பொருந்தாத உயிரோ வெற்ருவி, உயிரின் றேல் உடலில்லை; உடலின்றேல் உயிருக்குத் தன்மை யில்லை.

உடலில் ஒரு சிறு பகுதிக்குத் துன்பம் என்ருல் 'ஆ' என்று தன்னை அறியாமல் புலம்ப வைக்கிறது உயிர். உயிருக்கு ஊறு என்ருல் உடல் சோர்ந்து காய்ந்து அழி கிறது. உடல் வளத்தோடு வாழ்ந்துவரின் உயிரும் வளத்தோடு நீடிக்கும். உயிர் வளம்பெற்றது என்ருல் உடலும் பூரிக்கும். இன்பத்திலும் துன்பத்திலும் இன்றி யமையா நட்புக்கொள்கின்றன இரண்டும். இரண்டும் இரண்டல்ல ஒன்றே என்னும்படி இயைந்த நட்புக்