பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 23

அவனை அவள் வயத்தளுக்கின. இவற்றையெல்லாம் விட அவளது நெற்றியழகு அவனைக் கவர்ந்தது. அவளது நெற்றி எழிலை விரும்பின்ை என்பதோடு நெற்றி எழிலால் அடிபட்டுவீழ்ந்தான் என்றும்கூறலாம். அதனுல் அவளைக் குறிப்பிடும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் திருதுதல் என்றே குறிப்பிடுவான்.

அவன் ஒருநாள் அமர்ந்து ஏதோ ஆழ்ந்து சிந்தித் துக் கொண்டிருந்தான். இடையிடையே முகம் மலர்ந் தான். கன்னங்கள் பூரித்தன. பூரிப்போடு பாவையே’ என்றழைத்தான். அங்குப் பாவையுமில்லை, பாவையின் நிழலுமில்லை. மீண்டும், ஏ, பாவையே கண்ணுள்ளே -யிருக்கும் கருமணியின் பாவையே என்ருன். அப் போதுதான் அவன்தன் கண்ணுேடு பேசுகிருன் என்பது தெளிவாயிற்று. தொடர்ந்தான் : கருவிழியுள் அமைந் துள்ள என் கண் பாவையே, நீ போ! நீ இருக்கும் இடத்தை விட்டு நீங்கிப் போ விரைவில் சென்று விடு அந்த இடம் எனக்குத் தேவைப்படுகிறது. அவ்விடத் திலே உன்னிலும் சிறந்த ஒன்றை வைக்க வேண்டும். அவ்விடத்தைத் தவிர மற்றெந்த இடமும் நான் வைக்க விரும்பும் பொருளுக்குத் தகுதியுடையது ஆகாது. ஆகவே சென்றுவிடு பாவையே, உன் இடத்திலும் ஒரு பாவையைத் தான் வைக்க இருக்கிறேன். அந்தப்பாவை எத்துணை அழகினள் தெரியுமா ? என்னல் அத்துணை அழகையும் விளக்க இயலாது. அவளது நெற்றியழ கொன்றே எனது விருப்பத்தை யெல்லாம் கவர்ந்து என்னை வீழ்த் தியும் விட்டது என்ருல் நான் எவ்வாறு பிற அழகுகளை விளக்குவேன். அவளுக்குத்தான் நீ இருக்கும் இடம் தேவை. அந்த அழகிய நெற்றியை உடையவளை என்னிடையே பதித்துக் கொள்ள இடம் தேடினேன். நீ இருக்கும் இடந்தான் தகுதியென்று