பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 25

அப்படியோ ! எனக்கினியதா ? தாமரை போன்ற கண்ணையுடைய எம்பிரான் திருமாலது வைகுந்த உலகத்தை அடைவதுதான் எனக்கினியது. அதனைவிட இனியது வேறு யாருக்குத்தான் ஏது?-என்ருர்,

அவன் நகைத் தான் : அது இனியதா? அத்துணை இனியதா? தாமரைக் கண்ணன் திருமாலது வைகுந்த உலகமோ இனிது? “தம்மால் விரும்பப்படும் அன்பு மனையாளது மெத்தென்ற தோள்களோடு துயில்வதை விட அந்தத் தாமரைக் கண்ணுன் உலகு இனியதோ? என்ருன்.

முதியவர் என்ன சொல்வார் ? தம் இளமைப் பருவத்தை எண்ணியவாறே பேசாது மீண்டார்.

மகனே, மனையாளைக் கண்ணினும் சிறந்தவளாகக் கருதிய கணவனைக் கண்டாயா ? சிறந்த உறுப்பான கண்ணினிடத்திலன் ருே அவளே வைத்துக் காணவும் பேசவும் விரும்பினன். அவளைக் கொண்டன் ருே உல கையே காணவும் விரும்பின்ை அதுமட்டுமோ அவ ளோடு உளமொத்துப் பிரியாது வாழ்வதே பேரின்பம் என்றும் கொண்டான். பருவத்திற்கேற்ற உணர்வு கொண்ட பக்குவமான கணவன் அவன். நீயும் அந்தக் கணவனுக வாழ்க அந்தக் கண்னைப் பெற்று வாழ்க ! அந்தக் கண்ணளுக வாழ்க 1-என்ருர் வள்ளுவர்.

அவளுக்குக் கண்ணளுக அமைந்தவனை நாமும் இனிக் கண்ணன் என்றே குறிப்போம். *

என்ன செய்வான் அந்தக் கண்ணன். தன் கண் பாவையை நோக்குவான ; பக்கத்திலுள்ள பொன்

షాజ్వషిణా

  • தக்விடுவர் மென்ருேள் துயிலின் இனிதுகொல்,

தாமரைக் கண்ணுன் உலகு. வ. வா-2.