பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 27

என்ற அவாவும் எழும். தோண்டத் தோண்ட ஆழம் ஏற்படும். ஆழம் செல்லச் செல்ல ஊற்றுப் பெருக்கு மிகும். ஊறுகின்ற நீர்க்கும் ஒரு புதுமை உண்டு. ஆளுல் மேலும் ஊறும் நீரை நோக்க அப்புதுமை மறைந்து அந்நீர் பழையதாகிவிடும்.'

இது போன்ற கல்வியறிவு எத்தகையது என்பதை யும் உணர்ந்திருப்பாயே கண்ணு !!

தந்தையே, கல்விக்கு நேர் இயைபான மணற் கேணியைத் தாங்கள் உவமை கூறிய பின்னர் மிகத் தெளிவாக உணர்ந்தேன். கல்வியென்பதும் தோண்டு தல் போன்று அறிவைக் கல்லுவதுதானே. அக்கல்வியும் பல நுணுக்கக் கருத்துக்களைக் கொண்டது. கற்கத் தொடங்கிய அளவில் கருத்து ஊறும்; கருத்தும்வளரும். வளர வளரக் கற்க வேண்டும் என்ற விருப்பம் எழும். கற்கக் கற்க ஆழ்ந்த அறிவு மிளிரும். ஆழ்ந்து செல்லச் செல்ல அறிவுப் பெருக்கம் ஏற்படும். ஏற்படும் அறி வுக்கும் ஒரு புதுமை உண்டு. ஆல்ை கிடைக்கும் அறிவை நோக்கக்கிடைத்த அறிவு பழையது; கிடைக்க வேண்டிய அறிவு புதியது '

கண்ணு, இந்தக் கல்வியறிவிலும் ஒரு வியப்பான உண்மை புலப்படும். ஒன்றைக் கற்றபின்னர்தான் அதன் கருத்தை அறியலாம். கற்பதற்கு முன்னர் அக் கருத்துப் பற்றிய அறியாமைதான் உண்டு. கருத்தை அறிந்த பின்னரோ-'அந்தோ அவ்வறிவைப் பெருத .ே ப ைத யாக இருந்தோமே-என்ற எண்ணம் எழும். கற்றுக் கற்று அறிய அறியத்தான் அதுவரை கொண்டிருந்த அறியாமை தென்படும்; நீங்கும்.

. மனையாளின் உள்ளத்தை உணர்வதும் இவ்வகைக் கல்வியேயாகும். அவளோடு பழகினுல்தான் அவளோடு