பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளுவர் வாழ்த்து

அவர் என் கண்னுள்ளே இல்லையடி. நுண்பொருளாக உள்ளவர டி. "என் அன்புருவானவர் அவர். ஆகையால் இமைப்பதால் கண்ணிடத்தி னின்றும் போய்விட மாட்டார். இமைப்பதால் இமைபட்டுத் துன்புறவும் மாட்டார். அத் துணை நுண்ணியவர் அவர். உனக்கெப்படித் தெரியும் ? தெரியாது போடி.'

சரி எழுது; விரைவில் எழுது ; உணவு வேளை யாயிற்று. எழுதிக் கொண்டு இருவருமாகவே வருக ! ஆளுல், நான் ஓர் உண்கலத்தில்தான் உணவு படைத் திருப்பேன் ' என்று சொல்லிச் சென்ருள். சென்றவள் பக்குவமான சுவையோடும் பதமான சூட்டோடும் உணவு படைத்தாள். அவளும் வந்து அமர்ந்தாள் ; உணவிலே, கைவைத்தாள் ; உணவை எடுத்தாள். கை தாங்கும் சூ ட் டே டு இருந்தது. வாயண்டைக் கொண்டு சென்ருள். திடீரென முகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. உணவு வாயிற் சேறவில்லை. கை சோர உண்கலத்தில் வீழ்ந்தது உணவு. ஏதோ பேரச்சம் கொண்டவள் போல் அகல விழித்தாள்.

அந்நிலைகண்ட தோழியும் அஞ்சிப் போளுள். ஏன் பதமான சூடாகத்தானே படைத்தேன் ; அதையா தாங்க முடியவில்லை ?-என்று துடித்துக் கேட்டாள்.

கைக்கும் வாய்க்கும் பக்குவமான சூடுதான், இருந் தாலும் அச்சமாக இருக்கிறது. - . . . .

எதற்கு ?" - - - - நெஞ்சு தாங்கும் சூடன்று இச்சூடு. ஆகையால் சூடான இச் சோற்றை உண்ண அஞ்சினேன்

  • கண்ணுள்ளின் போகார் ; இமைப்பின் பருவார் ;

நுண்ணியரெம் காத லவர்.