பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 35

தேய்ந்த விரல்

மக்காள், பிரிவு என்பது கொடுமையானதுதான். ஆனல் பிரிந்தவன் பிரியப்பட்டவளது நிலையை உணர்ந் தவனுகவேண்டும். குறித்த காலத்தில் மீளும் உறுதிப் பாட்டோடு பிரிய வேண்டும். இவ்வாருயின் பிரிவு கொடுமையானதன்று இயல்பானது - இன்றியமை யாதது மாகும்.

பிரிவு இருவரையும் வாட்டுவதானலும் இல்லத்தே தனித் திருப்பவளுக்கே மிகுதியான துன்பம் தரும். பிரிந் தார் என்று சொல்வதற்கு முன்னரே அவளது உடலில் பசப்புப் பரவிவிடும் என்ருல் அவள் எவ்வாறு அந்தப் பிரிவைத் தாங்குவாள் ? அதிலும் மணுளன் மிகத் தொலைவில் சென்றுவிட்டால் இன்னும் எத்துணைத் துன்பம் ?-சென்ற தூரம் தொலைவாயிற்றே ; மீளத் தொடங்கிளுலும் கடக்க நாளாகுமே ; இடையே எதிர் பாராத இடையூறு நேருமோ. உரிய காலத்தே வரு வாரோ-என்ற கவலைகள் வாட்டும். கவலையை அடைந் தோர்க்குப் பொழுதும் கழியாது. பொழுதே போகாது என்ருல் நாள் எவ்வாறு நகரும் ? மிகத் தொலைவான இடத்தே சென்ற காதலர் மீளும் நாளே எண்ணி, எண்ணி ஏங்குகின்றவர்க்கு ஒருநாள் ஏழு நாள் என்ன, எண்ணிக்கை யற்ற நாளாக அன்ருே தோன்றும் ! -

உரிய காலத்தில் வந்துவிடுவாரென்ற நம்பிக்கை ஒரு பக்கத்தே தாங்கிப் பிடிக்கும். வரமாட்டாரோ என்ற ஐயம் மறுபக்கம் தாழ்த்திப் பார்க்கும். குறித்த காலத் துக்கு முன்னரே வந்தாலும் வந்து விடுவார் என்ற வீண்.

--~~ --- ---- حبہ۔بی۔سمہ۔۔مبہم S AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

  • ஒருநாள் எழுநாள்போல் செல்லும்; சேண் சென்ருர்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.