பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் வாழ்த்து

அவா அவள் உடலே வாயிற்படிக்கே இழுத்து வரும். சென்ற வழிமேல் விழிவைத்துப் பார்க்கச்செய்யும். பார்த் துப் பார்த்துக் கண்கள் சோர்வுற்றுப் போகும். அதனல் துணுக்கமான தொலைக்காட்சிகளைக் காண முடியாமல் கண் புகைப் பார்வையைப் பெறும். வருகையைக் காணுது போனல்- எப்படி வருவார் ? போய் எத்தனை நாட்களாயின ?-என்று நாளை எண்ணிப் பார்க்கச் சொல்லும். மனத்திற்குள்ளேயோ, வாய்விட்டோ எண்ணினுல் உள்ளம் பெற்றுள்ள தடுமாற்றத்தால் எண்ணிக்கை விட்டுப் போகும். அதனுல் வண்ணக் கட்டியை எடுத்துச் சுவரிலாவது கதவிலாவது ஒரு நாளைக்கு ஒரு கோடு என்று கோடிட்டு அக் கோடுகளை நாழிகைக்குப்பலமுறை எண்ணிப்பார்க்கச் செய்யும். அத் தோடு விரல்களை வரிசையாகக் கட்டை விரலால் ஒற்றி ஒற்றிஒன்று, இரண்டு, மூன்று, நான்கு; ஒன்று, இரண்டு : மூன்று, நான்கு; ஒன்று இரண்டு, மூன்று, நான்கு-என்று மீண்டும் மீண்டும் நாட்களே எண்ணிப் பார்க்கும் அவா எழும். இவ்வாறு சுவரிலும், விரல்களிலுமாக இமைக் கொருமுறை ஒற்றினுல் அந்த விரல்கள் என்ன ஆகும் ? * காதலர் மீள்வார் என்று எதிர்நோக்கும் பார்வையால் கண்களும் ஒளியத் றுப் பார்வை மங்கிப்போனவையாகும். பிரிந்து சென்ற நாட்களே. ஒற்றி ஒற்றி எண்ணிக்கை இடுவ தால் விரல்களும் தேய்ந்தனவாகும். அந்தோ! மணுள&னப் பிரிந்த மனையாள் நிலை இரங்கத்தக்கதாகும்.

உடைந்தபின் ஒட்டுறவு இல்லை - இந்த இரங்கக்தக்க நிலைகளை எல்லாம் பிரிபவன் துப் பார்க்க வேண்டும். செல்லும் வினைமுடித்து

  • வாாற்றுப் புற்கென்ற கண்னும், அவர்சென்ற

காsெ நிறித் தேய்ந்த விரல்.