பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 37.

மீளும் நாளைச் சரியாகக் கணக்கிட்டுக் குறிக்க வேண்டும். குறித்த நாள் தவருமல் மீள்வதற்குத் தக்கபடி வினை செய்தல் வேண்டும். அந்தக் காலம் தவறினுல் என்ன நிகழும் ? கண் ஒளி மங்கிய அவள்-விரல் தேய்ந்த அவள் தன் உள்ளத்தைமட்டும் எந்நிலையில் வைத்திருப் பாள்? அவள் உள்ளம் அவளைக்கேட்காமலே உடைந்து போகுமே. உடைந்த உள்ளம் உயிரையும் ஒழுகவிடுமே. * உள்ளம் உடைந்து அவள் உயிரையும் இழந்துவிடுமிடத்து அதன் பின் பிரிந்த என்னை மீளப் பெறுவதல்ை அவளுக் குத்தான் என்ன பயன்? மீண்டுபோய் அவளை அடைவதால் எனக்குத்தான் என்ன பயன் ? அதன் பின் உடலால் இருவரும் கூடுவதால் எவருக்குத்தான் என்ன பயன் :என்பவைகளை எல்லாம் நீ நினைந்து நோக்க வேண்டும் கண் கு.' -

கண்ணம்மா, பிரிவு இயல்பானது என்று நீயும் பொறுக்கவேண்டும். அதற்காக உள்ளம் உடைந்து உயிரிழந்து பயனற்று அழியக் கூடாது, பணிகருதிப் பிரிதல் உலக இயல்பு: இல்லறக் கடமையுமாகும். உலக இயல்பின் மாற்றங்களால், சென்றவருக்கு இடையூறு ஏற்படுவதுண்டு. அவ்விடையூறுகளால் .ெ ச | ன் ன உறுதிமொழியிலிருந்து மணு ளன் தவற நேர்வதுமுண்டு. ஆயினும் அஃது தவருகாது. அஃது ஒரு சருக்கல். அஃது ஏற்கத்தக்க ஒன்றுமாகும். ஏற்கத்தகாத தவற் றையும் மணுளன் செய்ய நேரலாம். * என்னைக் கொண் டவர் எனது நலனேப் பாதுகாவாது, தன் விருப்பத்

  • பெறினென்னும்; பெற்றக்கால் என்னும், உறினென்னும்;

உள்ளம் உடைந்துக்கக் கால். * .

  • பேணுது பெட்டவே செய்யினும், கொண்கனக்

காணு தமையல கண்.