பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 39

ஆவான். ஒரு வகையில் நோக்கினுல் மளுளன் மனை பாட்கு அமிழ்தமே ஆவான். கண்ணு, அமிழ்தத்தைப் பற்றி அறிந்திருப்பாயே

ti શ, தந்தையே, உண்டாரை நெடுங்காலம் வாழ வைப்பது: பாற்கடலிலிருந்து தேவர்களா......”

கண் ணு, அது நீ கதையிலே கேள்வியுற்ற அமிழ் தம். கண்ணுல் காணப்படும் அமிழ்தத்தை நீ அறிந்த தில்லையா? வானத்து மழையில்லாமல் உலகு உண்டோ? உலகத்து உயிர்கள் உண்டோ? “வான்மழை இடையருது பெய்கிறது. பெய்யவே உலகத்து உயிர்கள் தொடர்ந்து பல்கிப் பெருகி வாழ்கின்றன. அதல்ை, அந்த மழை தான் உலகத்து உயிர்கட்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும். உலகத்து உயிர்கள் எல்லாம் அந்த வானத்தை நோக்கியல்லவா வாழ்பவை: மனையாளும் மணுவானது அன்பை நோக்கியே வாழ்பவள் அல்லளோ! விசும்பினின்று ஒரு துளி வீழாது போகுல் பசும்புல்லும் தலைகாட்டி வாழ முடியாதே; அவனது அன்பு துளியளவு குறைந்தாலும் அவளது. பெண்மை அழிந்து போகுமே, மக்கள் உயிர்க்கும் மழைதான் இன்றியமையாதது ; அவளுக்கும் அவன்தான் இன்றியமையாதவன். மக்க ளது உணவை உருவாக்குவதும், உணவாகவே உதவு வதும் மழையே; அவளது வாழ்வை உருவாக்குபவனும், வாழ்வாகவே அமைபவனும் அவனே. வானம் மழையை வழங்காமல் பொய்த்துப் போளுல் உலகைச் சூழ்ந்து விரிந்து கிடக்கும் கடல் நீர், மழைபோற் பயன்படுமா ? மழைத்துளி பெருத உயிர்களைப் பசியல்லவோ வாட்டும். அதுபோல் அவனது அன்பில்லாமல் எத்துணைச் சுற்ற

AMMMASAMSMMSMMSMMSMSMS SAASASAAAMSAMAMAAAS

  • வானின் றுலகம் வழங்கி வருதலான்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

.....~~.