பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 41

என்று கூறி நகைத்தார் வள்ளுவர். அமிழ்தத்தை உண்ணவா அயர்ந்து போவார்கள் அவர்கள் ? .

ஆம் தந்தையே. இவர் எனக்கு வாழ்வளிக்கின்ற அமிழ்தம் ' என்ருள் கண்ணம்மா.

இவள் எனக்குச் சுவை அளிக்கின்ற அமிழ்தம்' என்று முத்திரை வைத்த கண்ணன் மேலும் தொடர்ந் தான் :

' தந்தையே, பிரிவில்லாத வாழ்வு நல்லதுதான். ஆனல், பிரிவு இன்றியமையாததாகிவிட்டது. ஆகை யால், பிணக்கில்லாத வாழ்வையாவது அமைத்துக் கொள்ளலாம் என்பதைக் கண்ணம்மாதான் முடிவுகட்ட வேண்டும் ' -என்ருன்.

கருக்காயை உண்பரோ ?

' கண்ணு, நான்தான் முடிவுகட்ட வேண்டும். மகனே, பிரிவும், பிணக்கும் இல்லாத வாழ்வு வாழ்வன்று. பிரிந்திருக்கும்போது சென்று சேரவேண்டும் என்ற ஆர்வம் எழும். சேர்ந்தவுடன் பிரிவுத்துன்பம் அறவே மறக்கப்படும்; மறைந்துபோகும். பிரிந்திருந்தகாலத்துக் கழிந்திருந்த மகிழ்வை யெல்லாம் சேர்த்துச் சேர்ந் திருக்குங் காலத்தே துய்த்துவிட வேண்டும் என்ற பேரவா எழும். குறைகளை யெல்லாம் மறந்து எல்லே யிலாக் களிப்பெய்துவர் மனை யறத்தார். அப்போது எய்தும் எல்லையிலாக் களிப்பை மனையாள் உணரும் போது,- இத்துணைக் களிப்பையும் எய்தவிடாமல் பிரிந்து சில நாட்களை வீணே கழிக்கச் செய்தாரே. அந்த நாட்களில் என் இளமை அழகு அழியும்படி ஆக்கி

வ. வா-3.