பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவர் வாழ்த்து

{ இனிமை பயப்பதாகும். நிறைந்த அன்பில்லாரிடத்துக் கொள்ளப்படும் ஊடல் அன்புப் பிணைப்பை அறுக்கவும் அறுக்கும். -

மேலும் நுணுக்கமாகச் சிந்தித்தால் நிழலது நீரெல் லாம் இனிமையைத் தருவதன்று என்பது புலப்படும். * கிழலின்கண் அமைந்த நீரும் தன்பாலமைந்த நச்சுத் தன்மையால் துன்பத்தைத் தருவதானல் கொடியதேயாகும். அதுபோல அன்புகொண்டு பழகும் உறவினரது இயற் குணம் துன்பத்தைத் தருவதானுல் அவரது உதவும் தீமை யானதாகும் அன்ருே இந்தப்பொது விதியைக்கொண்டு நோக்கினுல் நிழல் நீரின் தண்மையையும் சிந்தித்து ஏற்றற்குரியது என்பது விளங்கும். அதனுல், இன்ப முதிர்வால் அன்பு குன்ருத் தோற்றமளிக்கும் மணுள னிடத்து இயல்பான தீய தன்மைகள் முளைத்து எழலாம் என்பதை ஆராய்ந்து காணல்வேண்டும். அ த ன் பின்னரே ஊடல் நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்ற முடிவைக் காணல் வேண்டும்.

வெள்ளத்தில் பாய்வரோ ? .

!

இவற்றையெல்லாம் அறியாமல், இவற்றிற்கேற்ப ஒழுகாமல் ஊடல் நன்றே என்று நுனிப்புல் முடிவைக் கொள்ளுதல் தீது. ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதைப் பார்த்து, ஓடுவது நீர்தானே; இதில் குதித்தால் அடி படாது என்றுகருதிக் குதிப்பவருண்டோ? நீர்ப்பெருக்கு இழுத்துக்கொண்டு செல்லும் தன்மையது என்று உணர்வர். உணர்ந்ததும் அதில் பாய்ந்து அழிபவரில்லை!

  • நிழல்நீரும் இன்னத இன்னு: தமர்நீரும்

இன்னுவாம் இன்கு செயின்,