பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 49

- ஆகையால், கண்ணம்மா அளவறிந்து ஊட வேண்டும். நிறைந்த அன்பின் நிலைமையறிந்து ஊட வேண்டும். அல்லது நிறைந்த அன்பு கொள்வதற்கான நிலைமையை அவரிடம் உண்டாக்கிக் கொண்டு ஊட வேண்டும். அதல்ை இத்தரையிலேயே புத்தேள் நாட்டின்பத்தை அடைய வேண்டும். இத்தகைய வரை யறையும், இன்றியமையா இயல்புகளும் கொண்ட ஊட லுக்கு இன்னும் சான்று தந்து விளக்கவோ வேண்டும்?

' எனக்குச் சான்று போதும் தந்தையே! அதிக |மான சான்றுகளைத் தாங்கள் அறிவித்ததால் எல்லாப் பொறுப்பும் எனக்கே எண்றெண்ணி, இவர் என்னைக் குறும்பாகப் பார்க்கிருர் '-என்ருள் கண்ணம்மா.

வஞ்சிக் கொடியும் வள்ளிக் கொடியும்

கண்ணம்மா, பொல்லாதவனல்லன் கண்னன் . பொறுப்புணர்ச்சி இல்லாமை மணுளனது தன்மைக்கே பகை என்பதை உணர்ந்தவன். மகளே, ஒரு கொடி நீர் பெருமல் காய்ந்து தளர்ந்து கிடப்பதை உன் கண்ணன் காண நேர்ந்தால் உள்ளம் கனிந்து உருகுவானன் ருே ? அதற்கு உடனே நிழல் தந்து, நீர் ஊற்றி, கொழுகொம் பமைத்து உயிருட்ட முயல்வான அஃதன்றி அக் கொடியை அடியோடு அறுத்து வீசி எறிவான ? வீசி யெறியும் அத்தகு பொல்லாங்குள்ளவனல்லன் உன் கண்ணன். அது ஒரு கொலேத் தொழில் என்பதை உணர்ந்தவன். ஊடி நிற்கும் வஞ்சிக்கொடியாள், வாடி நிற்கும் வள்ளிக்கொடி போன்றவள் அல்லளோ? அவளும் அன்புக்காக ஏங்கிக் கிடப்பவள் ; கொடியும் நீருக்காகத் தளர்ந்து கிடப்பது ; அவளுக்கும் இன்மொழி