பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ வள்ளுவர் வாழ்த்து

கூறி அன்பணப்புத் தந்து அருள் செய்தன்ருே மகிழ்ச்சி யூட்ட வேண்டும். அவ்வாறன்றித் * தன்பால் ஊடல் கொண்டவரை உணராதிருக்குந் தன்மை, நீரில்லாமல் வாடிய கொடியை அடியோடு அரிந்து போடுவது போலா கும், அந்தக் கொலேயைச் செய்யும் கொடியவனல்லன் உன் கண்ணன். ஊடலை உணர்பவன் அதை நீக்கு பவன். . - ..

. கண்ணு, ஊடலை உணர்தல் என்ருல் அந்த ஊடல். அது ஊடல் என்று அறிந்து கொள்வதன்று. அந்த ஊடல் எக்காரணத்தால் ஏற்பட்டது என்று. அறிவது மட்டுமன்று. அவ்வூடல் மீண்டும் கூடலைப் பெறும் நோக்கத்தது என்பதை உள்ளத்தில் பதிக்க வேண்டும். அதற்கேற்ப அன்புப் பெருக்கை அளித்து அவளது உள்ளத்து ஆர்வத்தை நிறைவேற்ற வேண்டும். அது தான் ஊடல் உணர்த்தல் எனப்படும். அதற்குக் கடமைப்பட்டவன் மணுளன்.

மேலும் கூறினுல், மனையாள் என் மாட்டு ஊடப் பெற்றேனே" என்று மணுளன் களிக்க வேண்டும். ஊட லுக்கு அத்தகைய சிறப்பும் உண்டு * மலர் போன்ற கண்ணையுடைய மனையாளது கெஞ்சத்தே மலரும் ஊடல் மிகச் சிறப்பு வாய்ந்தது. அச் சிறப்பு நல்ல பண்புள்ள சிறந்த மனளனுக்கு ஒரு அணியாகும்-அழகாகும். கண்ணு, நீயும் அந்த அணியை அணிக அணிந்து இன்ப நிறைவால் அழகு பெறுக!-என்ருர் வள்ளுவர்.

షెఫె::::::::వ, .

  • ஊடியவரை உணராமை, வாடிய

வள்ளி முதலரிங் தற்று.

  • நலத்தகை கல்லவர்க் கேனர், புலத்தகை

பூவன்ன கண்ணு ரகத்து.