பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 51.

கண்ணம்மா, கண்ணனுக்குக் குறுவிழிப் பார்வை யோடு சிறுநகை நல்கினுள்.

அது கண்ட கண்ணன், தந்தையே, வெற்றி தன் பக்கம் தங்கிவிட்டதாக எண்ணி என் கண்ணம்மா தன் மகிழ்ச்சியை வாய்வழியே வழிய விடுகிருள். அந்த வெற்றியில் எனக்கும் பங்கு உண்டு என்பதை அவள் அறியவில்லை '-என்று கூறி அவள் நல்கியவைகளைத் திருப்பி ஏவிஞன். .

தோற்றவர்க்கே வெற்றி х

இவ்விருவர்க்கும் மேல்நிலை பெற்றவரான வள்ளுவர் அவர்களது நிலையைச் சமன் செய்ய எண்ணினர் : 'மக்காள், வெற்றியில் பங்குபெற நினைப்பதும், வெற்றியில் பங்கு தந்து உதவுவதும் மனையறத்திற்கு வேண்டற் பாலனவே. ஊடலும் வெற்றியைத் தரும் ஒரு சிறு போர் தானே! ஆனல் ஊடற்போர் ஒரு புதுமையான வெற்றி யைத் தருவது. ஊடற் களத்தில் போரைத் தூண்டு பவன் மணுளன் ; தொடுப்பவள் மனையாள் முடிப்பவன் மணுளன். பிரிவு என்னும் பூசலால் அவன் தூண்டு வான்; பிணக்கு என்னும் படையால் அவள் தாக்குவாள்; அத்தாக்குதலை எதிர்க்காமல் ஏற்று மகிழ்வான் அவன். ஏற்று மகிழ்வதால் தாக்குதல் வலிமையற்றுப் போகும். அதல்ை அவள் தோற்றுப்போவாள். ஊடல் தோற்றல் கூடல் நேரும். தாக்கிப் பெற எதிர்பார்த்த இன்பம் கிட்டும். ஆகையால் தோற்றவள், பெற்ற பயல்ை வெற்றி பெற்றவள் ஆவாள். அஃதேபோல் தாக்குத லாம் ஊடலைத் தாங்க முடியாமலும், தீர்க்க முடியாமலும் மணுளன் வருந்தினுல் அவன் தோற்றவனவான். அத லுைம் அவன் பெறுவது இன்பமாம். இவ்வகையிலும் வெற்றியின் பயனைத் துய்ப்பவளுவான். ஆகையால்