பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வள்ளுவர் வாழ்த்து

  • ஊடற் களத்திலே தோற்றவர்தான் வெற்றி பெற்றவ ராவார். அவ்வெற்றியின் உண்மையும், சுவையும் கூடிக் களிப்புறும் போது தான் காணப்படும்.

ஆகையால், * காமத்திற்கு இன்பத் துாண்டு கோலாய் அமைவது ஊடல், ஒத்த அன்பினராய் ஊடல் நீங்கிக் கூடித் தழுவப் பெற்றல் அது அந்த ஊடலுக்கு இன்பமாய் அமையும். காமமும் ஊடலும் இவ்வாறு ஒன்றுக்கொன்று இன்பம் நல்கிக்கொள்ளும் புதுமைப் பேறுகள். அவற்றுக்குரிய மணமக்கள் வெற்றியில் பங்கு பெறுவதற்கும் உரியவர்கள்.

மக்களே, * பேரின்பம் கருதி ஊடுதலும், பின்னர் வரையறைகளை அறிந்து அவ்வூடல் நீங்கப் பெறுதலும், அதன் பின்னர் கூடிக்குலவுதலுமாகிய இவைகளே அன்பு வேட்கையால் கூடிய காதலர்கள் பெற்ற பயணுகும்.

மணமக்காள், காமத்தைப்பற்றி நாம் கண்ட விளக் கங்களை எல்லாம் ஒன்று கூட்டி நேர்க்குவோம் : காமம் மலரினும் மெல்லியது. அதை மணமக்கள் இனியதாக்கி உயிரும், உடலுமாய் நட்புக்கொள்ள வேண்டும். அந் நட்பால் மனையாளைச் சிறந்த உறுப்பாம் கண்ணினும் சிறந்தவளாய்க் கருதவேண்டும். பழகப்பழகப் புதுப் புதுப் பண்புகளைக் காணவேண்டும். மணுளனைக்

.----

مهام هتة من ممن مّن شهية

  • ஊடலில் தோற்றவர் வென்ருர்; அதுமன்னும்

கூடலில் காணப் படும்.

  • ஊடுதல் காமத்திற் கின்பம்; அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

  • ஊடல், உணர்தல், புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.