இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மகனே கேள் !
அவ்வளவுதான் அறம்
'வருக மக்காள் அமர்க! என்ருர் வள்ளுவத் தந்தை.
கைகுவித்துத் தலைதாழ்த்தி வணங்கிய கண்ணனும் கண்ணம்மாவும் நிமிர்ந்தனர். மின்னலின் இழை ஒடும் அவர்களது இரு முகங்களும் இரு நிலவு அடுத்தடுத்துத் தோன்றின போலிருந்தன. வள்ளுவச் செம்மல் அவர்கள் முகத்தில் நேற்றில்லாத புத்தொளியைச் சுவைப்பது போலப் பார்த்தார். அவர்கள் உள்ளம் பெற்றிருக்கும் பூரிப்பின் மலர்ச்சியை அவர்களது முகங் களிலே கண்டார் போலும் !
மக்காள், நேற்றுக் கேட்டு அறிந்தவைகளின் உண்மையை உங்களது பளிங்கு முகங்கள் எடுத்துக் காட்டுகின்றனவே - என்ருர்.
கண்ணம்மா தலை குனிந்தாள். அவளது இதழ் ஒரத்தே முகை நின்றது ; அதை அவனது நகை வென்றது. அதற்கு மேல் அவர்களைத் தளர்த்த எண்ண வில்லை, பண்புத் தந்தை. -
மக்காள், வாழும் வகையறியும் நோக்கம் அன்ருே இன்று உங்களது வருகைக்குக் காரணம்?