பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 57

" தந்தையே, பிற இடத்தே இருந்தும் செய்வோர் உண்டோ ?' -

உண்டு, துறவு நிலையில் நின்று செய்வோர் உண்டு -என்ருர்.

என்ன எண்ணிஞனே என்னவோ, கண்ணன் கண்ணம்மா பக்கம் நெருங்கி நகர்ந்தான். அவனுக்கு இல்லறப் பிடிப்பு அந்த அளவு ஊன்றிவிட்டது. துறவு என்ற சொல்லுக்கே இடந்தர அவன் மனம் ஒப்பவில்லை. இந்த நிலையைச் சமாளிப்பதற்கு அவள் ஒரு ஐய வினுவை எழுப்பினுள்.

தந்தையே! எதனை அ ற .ெ ம ன் று சுட்டிச் சொல்லலாம்.'

இன்றியமையாத ஐயம் மகளே அறம் என்று ஒன்று தனியாக இல்லை. நல்ல பயனைத்தரும் செயல்கள் எல்லாம் அறம் எனப்படும். நல்ல பயனைத் தர நல்ல செயல் நிகழவேண்டும் ; நல்ல செயலுக்கு நல்ல எண்ணம் வேண்டும்; அதற்கு நல்ல உள்ளம் வேண்டும். நல்ல உள்ளம் என் ருல் குற்றமற்ற உள்ளம் அன்ருே ! * உள்ளத்தே குற்றமற்றவராக ஆதல் வேண்டும். அவ் வளவுதான் அறம்.'

' தந்தையே, பிற எல்லாம் ' - என்ருன் அவன்.

பிற எல்லாம் வெற்று ஆரவாரத் தன்மையை உடையவை -என்ருர். -

அவன் : அதாவது வெறும் வெளிப்பகட்டு மேம் பட்ட நடிப்பு என்ருன்.

میبا-مسح ہ۔ مہ:...می. --مح~_۔ . . .--. -------- SAASAASAASAASAASAASAA AAAS

  • மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்;

ஆகுல ரே பிற.

வ. வா-4.