பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வள்ளுவர் வாழ்த்து

அவளோ மேலும் நுணுக்கமான ஒரு ஐயத்தை எழுப்பிளுள் : தந்தையே, உள்ளத்துக் குற்றம் என்று எதைக் குறிப்பிட்டீர்கள் ?'

தீய எண்ணங்கள் எல்லாம் மனக் குற்றங்கள் தான். வாழத் தொடங்குகின்ற அவ்லது குறையோடு வாழ்கின்ற ஒருவன் மற்ருெரு பெருவாழ்வு வாழ்கின்ற, வனைக் காணும் போது பொருமை கொள்வது குற்றந் தானே! அப்பொருமை என்பது மன அழுக்கு. அந்த அழுக்கு உண்டானுல் நிற்காது ; ஆருய்ப் பெருகும். அதனுல்தான் நம் முன்னேர் அதற்கு அழுக்காறு என்று ஒரு பெயரிட்டனர். அந்த ஆறு ஓடத் தொடங்கில்ை * ஐயோ, இவன் இப்படிப் பெருவாழ்வு வாழ்கின்ருனே ! நமக்கு அந்தப் பெருவாழ்வு அப்படியே மாறக் கூடாதா!! -என்ற அவா மிதக்கும். பிறரது பெருவாழ்வுக்குக் காரணமான செல்வங்களைத் தான் கொள்ள வேண்டும் என்று எண்ணும் அவா நல்லதா மகளே !'

இல்லையே, குற்றந்தான் தந்தையே"

அந்த அவா நிறைவேறது போனல் வாழ்பவனைக் காணும்போதெல்லாம் சினம் சுழிபோடும். சினம் நல்ல சொற்களையோ எழுப்பும்? கடுஞ் சொற்களாகிய துன்பந் தரும் சொற்களையன் ருே அலைபோல் எறியும் ! ஒரு குற்றம் தொடர்பாக நின்று எத்தனை குற்றங்களை விளை விக்கிறது பார்த்தீர்களா !

೨೩೯ : "ஆம், தந்தையே பொருமை, பேரவா, சினம், துன்பந்தரும் இன்னச் சொல் ஆகிய குற்றங்கள் கூடாது தந்தையே !' -