பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 59

ஆம், பிறரது பெருவாழ்வைக் காணும்போது உண்டாகும் பொருமை, அந்தப் பொருமை காரணமாக எழுகின்ற அவா, அந்த அவாவால் உண்டாகும் சினம், அந்தச் சினம் வெளிப்படுத்தும் துன்பந்தரும் சொற்கள் ஆகிய நான்கையும் நீக்கி இயற்றப்படுவதே அறம் ஆகும்.

இவ்வறத்தால்தான் வாழ்வின்பத்தை எய்தலாம். இவ்வறத்தைத் துறவிகள் தனித்து நின்று ஆற்றுவர். அஃது துறவறம். நீங்கள் இவ்வறத்தை இல்லத்தே இருந்து துணைக்குத் துணையாய், தோளிணைக்கு இணை யாய் இணைந்து நின்று ஆற்ற வேண்டியவர்கள். இஃது இல்லறம். * -

இல்லறத்தே இடம் பெறுகின்ற நீங்கள் தனித்தனி யாகவும், கூடி நின்றும் ஆற்றத்தக்க கடமைகள் பல. அவற்றிற்கெல்லாம் அடிப்படையானது மனத்துக்கண் மாசு இல்லாததாகிய இவ்வறமேயாகும். இந்த அடிப் படையில் நீங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தனித் தனியே உங்கள் இருவர்க்கும் அறிவிக்க எண்ணி யுள்ளேன்-என்ருர்.

' தந்தையே! எனக்கு முதல் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் ' என்ருன்,

ஆம் தந்தையே! கடமையினின்று அறிந்தும் அறியாமலும் விலகுவோர்க்குத்தான் முதல் வாய்ப்பைத் தரவேண்டும். ஆடவர் இனத்தைச்சேர்ந்த அவருக்கே முதலில் வாய்ப்பளித்து உணர்த்துங்கள்'-என்று ஒரு போடு போட்டாள் கண்ணம்மா.

SeSeSeeSAASAAAS -هي عم^ية عرية مس " متهمية متر.^س -......

  • அழுக்கா நவாவெகுளி இன்னுச்சொல் நான்கும் *

இழுக்கா இயன்ற தறம்.