பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 . வள்ளுவர் வாழ்த்து -

தந்தையோ சிரித்துக்கொண்டார். நேற்று அவளை அடக்கி ஆண்ட நாணம் அவர்களது ஒருநாள் இணைப் பில் அவளுக்கு அடிமையாகிவிட்ட மாற்றத்தை எண்ணிச் சிரித்தது போல் இருந்தது, சிரிப்போடு தோன்றிய அவரது ஒரப்பார்வை.

துணைவன்; நீயே காவலன்

மகனே, நீ நேற்று முதல் இல்வாழ்வான் என்று சிறப்பிக்கப்படுபவன் ஆகியுள்ளாய். ஆகவே, உனக்குத்தான் முதல் வாய்ப்பு. கேட்க மகனே, கேட்க இல்லறத்து ஆண் மகன் சிலருக்குத் துணைவன்; சிலருக்குக் காவலன். நீ யு ம் அத்தகையவளுய் அமைதல் வேண்டும். ' - -

தந்தையே, நான் எவர் எவருக்குத் துணை நிற்க வேண்டும் ' -

  • உன் வாழ்வில் நீங்காத் தொடர்பு உடையராய் உன் இல்லத்தில் இயல்பாய் அமைந்தவர்களை எல்லாம் நீ சிந்தித்துச் சொல்ல இயலுமா ?

இயலும் தந்தையே! என் வாழ்வில் இயல்பாய் அமைந்த முதல்வர் என் பெற்ருேர், அடுத்து இயல் பாய் அமைந்த தொடர்பு உடையவள் என் மனைவியாம் இவள். இனி இயல்பாக அமைய உள்ளோர். என்மக்கள்'

ஆம், ఇవి ఉత్త్మఖః நீங்காத் துணைவனுய் நிலத்த துணைவளுய் நிற்றல் வேண்டும். அவரவர்க்கு வேண்டிய கடமைகளைச் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும்.'