பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 61.

தந்தையே, இவர்களுக்கெல்லாம் நான் நீங்காத் துணைவன் என்ருல் பிற எவர்க்கு எவ்வகைத் துணைவளுய் ஆதல் வேண்டும்?'

இவர்கள் எல்லாரும் உன் அகத்தார். உன் இல்லத்தே இயல்பாய் அமைந்தவர்கள். இனி, புறத் தாராய் இயல்பான தொடர்பு இன்றி ஒருவருமே இல்லையா என்ன ? தமக்கென ஒன்றும் வேண்டாம் என்று துறந்து போனவர்கள் உண்டு. அவர்கள் தனித்திருந்து நூற்களை ஆய்ந்து, குற்றமற்றுச் சிந்தித்து அவ்வப்போது நல்ல அறிவுரைகளையும், வாழ்த்தையும் உங்களுக்கு வழங்கத் தகுதி பெற்றவர்கள். அவர் களுக்கு வேண்டுவன செய்து துணை நிற்க வேண்டு மன்ருே நீ வேறு சிலர் துறவியாகவும் இயலாதவர் களாய், வாழ்வில் எதையும் துய்ப்பதற்கும் வகையற்ற வர்களாய் வறியவராகி நிற்பர். அவர்களது பசிப் 'பிணியைப் போக்கி, வேண்டுவன தந்து நிற்க வேண்டுமன்ருே நீ மேலும், ஒரு துணையும், எவ்வகை உறவும் இல்லாமல் இவ்வாறு துறவியாக இருந்தும், வறியவராக இருந்தும் இறப்போர் உண்டு. அவர்களை நல்லடக்கம் செய்பவர் யார் ? உன்போன்று கடமை உணர்ச்சி உள்ளவரன்ருே இவர்களுக்குத்தான் நீ அவ்வப்போது துணைவகை அமைதல் வேண்டும் '

நன்று தந்தையே நான் காவலகை அமைய வேண்டும் என்றீர்களே எவர்க்குக் காவலனுக அமை தல் வேண்டும்?'

ஆம், நீ சிலர்க்குக் காவலகை அமைதல் வேண் டும். அவர்கள் பொதுவினர், உன் தமிழினத்து மக்கள் தென் புலத்தார் எனப்படுவர். நீ அவர்தம் ஆக்கத்திற்