பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - வள்ளுவர் வாழ்த்து

குரிய ஊக்கம் காட்டவேண்டும். நீ கொள்ளும் தெய்வத் திற்குக் கடனுற்ற வேண்டும். உன் இல்லத்தை நாடி உன்னை முன்னர் அறிந்தோரும் அறியாதோருமாகப் புதியவராய்ப் பலர் வருவர். அந்த விருந்தினரை அன்

போடு வரவேற்றுப் பேண வேண்டும். மற்றும் முன்

கண்ட மூவர் அல்லாத உறவினர் பலருண்டு. அவரெல் லாம் ஒக்கல் எனப்படுவர். அவர்களுக்கு அவ்வப்போது

உன் வளத்திற்கு ஏற்ப உதவி செய்து காக்க வேண்டும்.

இவர்களை எல்லாம் காக்கும் நீ மிக இன்றியமையாத

வன். ஆகையால், உன் உடல் நலத்திற்கும், உள்ள

நலத்திற்கும் நீயே காவலனுய் நின்று காத்துக் கொள்

ளல் வேண்டும்.' .

ஆகவே, நான்...'

  • இல்லத்தே இணைந்து வாழ்பவன் எனப்படும் நீ இல்லத் தொடர்பின் இயல்பையுடைய பெற்றேர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் கல்ல வழியில் நீங்காமல் கிற்க வேண்டிய துணைவன் ஆவாய்.
  • துறவிகளுக்கும், வறியவர்களுக்கும், எடுப்பார் இன்றி இறந்தவர்க்கும், இல்லத்தே இணைந்து வாழ்பவன் எனப்படும் தோன் துணையாவாய்.
  • இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் கின்ற துணை.

  • துறந்தார்க்கும் துல்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.