பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 63

  • தென் கிலத்து மக்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் என்னும் ஐந்து நெறிக்கண்ணும் அவ ரவரைப் போற்றிக் காத்தல் உனக்குச் சிறந்த கடமை யாகும். * - -

இவ்வாறு நீ முதல் மூவர்க்கு நீங்காத் துணைவனுய் அமைய வேண்டும். அடுத்த மூவர்க்கு வாய்ப்புடைய துணைவனுய் அமைய வேண்டும். உன்னெடு மிகுதி ஐவர்க்கும் சிறந்த காவலனுய் அமைய வேண்டும். இவ் வமைப்புக்களோடு இல்லறத்தின் இயல்பையும் அறிந்து இயங்க வேண்டும்.' -

இல்லற இயல்பு

" தந்தையே இல்லறத்தின் இயல்புகள் யாவை ?”

இல்வாழ்க்கை இடையருமல் தொடர்ந்து வள முடன் அமைவதே இல்லறத்தின் இயல்பாகும். அதற் கொரு பண்பு உண்டு ; பயனும் உண்டு. இவற்றை அறிவதே இல்லறத்தின் இயல்பை அறிவதாகும். மகனே, வாழ்வுக்கு அடிப்படையானவைகளை அறிவா யன் ருே ?

" ஓரளவு அறிவேன். உயிர் வாழ்விற்கு அடிப்படை யானது அறம். உடல் வாழ்விற்கு அடிப்படையானவை தேவையான அளவு உணவு, மானம் காக்கும் நல்ல உடை, தங்க உறையுள் ஆகிய மூன்றும் ஆகும்.'

இம் முன்றையும் தருவது எது? ' செல்வம் தந்தையே.' -

  • தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்ருங்

கைம்புலத்தா ருேம்பல் தலை. .

W.