பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வள்ளுவர் வாழ்த்து

அச் செல்வத்தை ஈட்ட வேண்டியவன் நீ. ஈட்டுவது என்பது மட்டுமன்று, முறையறிந்து ஈட்ட வேண்டும். செல்வம் வரும்வழி நேர்மையான வழியாக அமைய வேண்டும். பிறர்க்குத் துன்பம் விளையுமாறு ஈட்டப்படும் செல்வத்தோடு பழியும் சேர்ந்து வரும். பழியோடு செல்வத்தை ஈட்டுதல் கூடாது. பழிக்கு அஞ்சிச் செல்வத்தை ஈட்ட வேண்டும். ஈட்டிய செல்வத்தைச் செலவிடுவதிலும் முறை உண்டு. செல்வம் தான் மட்டும் துய்ப்பதற்கு ஈட்டப்படுவதன்று என்பதைக் குறிப்பாக உணர்வாய். உடல் வளத்திற்கும் அதனால் உயிர் வளத் திற்கும் உரிய உணவு, உடை, உறையுள் ஆகியவை முன்னர் அறிவிக்கப்பட்ட இயல்புடைய மூவர் முதலிய பதிளுெருவருக்கும் பகுக்கப்பட வேண்டியவை. பகுத்துக் கொடுக்கப்பட வேண்டிய இவற்றுள்ளும் உணவு முத லிடம் பெறுவது.

அஃதோடு, இல்லறத்திற்கு ஒரு பண்பு உண்டு. சிறப்பாக இல்லாளிடத்தும், பொதுவாக எவ்வுயிர்களிடத் தும் செலுத்தப்பட வேண்டிய அன்பேயாகும் அது. அஃதேபோல் இல்லறத்திற்குப் பயனும் உண்டு. அப் பயன் அற எண்ணத்தாலும், செயலாலும் உண்டாகும் இன்பமாகும்.

ஆகவே, செல்வத்தை ஈட்டும்போது பழிக்கு அஞ்சி ஈட்ட வேண்டும். அச் செல்வத்தைப் பிற யாவர்க்கும் பகுத்துக் கொடுத்தல் வேண்டும். பகுத்துக் கொடுத்துப் பின்னர், தான் உண்ணுதலை ஒருவனது இல்வாழ்க்கை பெறுதல் வேண்டும். அவ் வாழ்க்கையோட்டம் இடை யற்றுப் போதல் எக்காலத்திலும் இல்லை.

SAASAASAASAASAASAAAS س۔۔۔۔--مہ--منہم۔--

  • பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின், வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், -