உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 69;

இந்த விளுக் குறியோடு பெருமிதக் குறி ஒன்றும் இணைந்த கண்ணம்மாவின் பார்வை கண்ணன் மேல்

பாய்ந்தது.

தந்தையின் விளுவோடு கண்ணம்மாவின் பார்வை யையும் ஏற்றுக் கொண்ட கண்ணன்பேசின்ை : 'இல்லை தந்தையே, இல்லை. பெண் கற்பு என்கின்ற பண்பு வாய்க்கப்பெற்ருல் என்று நீங்கள் ஒரு துணைச் சட்டம் இட்டுக் கூறிய பிறகு நான் மாற்றம் சொல்ல என்ன இருக்கிறது?' என்று வள்ளுவர்க்குத் தலை தாழ்த் தின்ை. தலை தாழ்ந்தாலும் குறும்பான பார்வை கண்ணம்மா பக்கம் குத்திற்று.

கண்ணம்மா குறும்புக்குக் குறும்பு காட்டினுள் : 'உலகில் வேறு எது உளது-என்று தந்தை கேட்கவில்லை. உலகில் பிற எவையேனும் உள்ளனவோ'-என்ருர்கள். என்பதை நினைவுபடுத்துகிறேன். கற்புள்ள ஒருத்தியின் தகுதிக்கு உலகில் ஆயிரம் என்ன கோடியானலும் ஈடு ஆகா என்பதை அத்தொடர் விளக்குகிறது என்பதை நீங்கள் நினைவிற்குக் கொண்டுவந்தால் உங்கள் குறும்புப் பார்வையும் குறுவிழிக்குள் அடங்கும். அதற்காக நீங்கள் தலை தாழ்ந்திருக்க வேண்டியதில்லை. அத்தகைப் பெண் இனத்துச் சார்பாளினியாம் கண்ணம்மா உங்கட்குத் துணையாக வாய்த்திருக்கிருள்; நிமிருங்கள்'-என்ருள்.

நன்று சொன்குய் மகளே ! நீ துணை. பெண் இல்லறத்தானின் துணைதான். அதனுல்தான் இல்லறப் பெண்னை யான் வாழ்க்கைத்துணை என்னும் சொல்லால் குறிப்பதுண்டு. இல்லறத்து ஆண் மகன் இல்லில் வாழ் பவன். அதனல், அவனுக்கு இல்வாழ்வான் எனும் சொல் அமைந்தது. இல்லறத்துப் பெண்ணுே அவனது,