பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளுவர் வாழ்த்து

டது. அவனையே தனது உடலாகக் கொள்வது உள்ள மாகக் கொள்வது ; உயிராகக் கொள்வது. மேலும் கூறி குல் கணவனையே தெய்வமாகக் கொள்வதுதான் கற்பு, கற்புள்ள பெண்ணுக்கு வேறு தெய்வம் இல்லை. அவள் வேறு தெய்வத்தைத் தொழுவதுமில்லை. இது தமிழ்ப்

பண்பு என்பதை அறிவாயே கண்ணம்மா ? :

"ஆம், தந்தையே, என் தாய் வாயிலாக அறிந்துள் ளேன். பெண்கள் பருவம் அடைந்த பிறகு தம் பருவ காலத்தை அறிவிக்கும் பிறைத் திங்களைக் காண்பர் - தொழுவர். பிற எத்தெய்வத்தையும் உள்ளத்தால் எண்ணவும் மாட்டார். மளுளனை அடைந்த பிறகோ அந்தப் பிறைத் திங்களையும் தொழுவதில்லை. .

கண்ணன் குறுக் கிட்டான் அதற்கு மேலுள்ள செய்தியை என் தங்கை சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தங்கை ஒரு முறை கண்ணம்மா வாடியவாறு அமர்ந் திருப்பதைக் கண்டாளாம். வாட்டத்திற்கு காரணம் கேட்டாளாம். ஒன்றுமில்லை ' என்ற பதில் ஏக்கத் தொண்டையிலிருந்து வந்ததாம். பொல்லாத குறும்புக் காரியாகிய என் தங்கை இவளது உள்ளத்தை உணர. வழி ஒன்றைக் கைக்கொண்டாளாம். - 'கண்ணம்மா, அதோ பிறை தெரிகிறது"-என்று கூறித் தான் தொழு தாளாம். பக்கத்திலிருந்த இவள் தொழாமல் குனிந்து வாடியபடியே அமர்ந்திருப்பதைப் பார்த்து நகைத்த, வாறே-ஏனடி பிறைதொழ மறுக்கிருய் பருவம் அடைந்த பெண்கள் மணக்கப்பெற்ருலோ, அன்றி எவ. ரையும் மனத்தில் வரித்தாலோ தான் பிறையைத் தொழ். மறுப்பார்கள். உனக்கோ மணம் நிகழவில்லை. ஆகவே... உள்ளத்துக்குள்ளே புகுந்திருப்பவர் யாரடி ? எனக்குத் தெரியுமடி யாரைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள