உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 73

வேண்டுமென்று. என் அண்ணன் கண்ணன் வரும் நேரந்தான். நான் வருகிறேன்-என்று புறப்பட்டா ளாம். புறப்பட்டவளை இவளது கை தடுத்ததாம். ஆனல் உள்ளத்து எண்ணத்தை இவளது முகத்தால் தடுக்க முடியவில்லையாம். பளிச்சென்று சிவந்த முகமும், அதில் பளிச்சிட்டு நின்ற நாணமும் சொன்ன செய்தி களைப் புரிந்து கொள்ளாதது போல் என் தங்கை என்னி டம் விளக்கம் கேட்டாள். இவற்றிலிருந்து பெண்களின் தெய்வம் தொழாமையை நான் அறிந்து கொண்டேன் தந்தையே.'

முகம் செவ்வானமாகிக் கண்கள் தேன் குழம்பாகித் தவித்தாள் கண்ணம்மா.

வள்ளுவத் தந்தை பேசினர் : ஆம், பருவப் பெண் கன்னி. அவளது கன்னித் தன்மை ஒருவனை உள்ளத் தில் கொண்டபோது கற்பு ஆகிவிடும். அதைக் காக்க அவள் தன் உள்ளத்தை வேறு எந்தத் தெய்வத்திடமும் செலுத்தமாட்டாள். தன் கணவனையே தெய்வமாகக் கொள்வாள். அவனையே உள்ளத்தில் பதிப்பாள். எப் பொழுதும் அவனைப்பற்றிய நினைவையே கொள்வாள். தூக்கக் துக்கனவிலும் அவன் நினைவே நிற்கும். விழிக் கும்போதும் அவன் நினைவே எழும். அத்தகையவள் கற்புடைய பெண் ஆவாள். அவள் தெய்வத்தை உள் ளத்தில் கொள்ளமாட்டாள் ; கொள்ளாதவளாய்த் தன் கணவனேயே தெய்வமாகக் கொண்டு, தூங்கி எழும் போதும் அவனேத் தொழு தவாறே எழுவாள். அவனை உள்ளத்தில் பதித்தவாறே எழுவாள். அத்தகையவள்

こc××>2<>○○○○○ー

  • தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதெழுவாள்,

பெய்யெனப் பெய்யும் மழை. - வ. வா-5.