பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 75

"அறிந்தேன் தந்தையே! அவ்வாறே ஆவேன்." அவன் பேசிளுன் : பெண்மை ஆண்மையைவிட இரட்டிப்புப் பொறுப்புடையது போலும். தன் கற்புக் குத்தானே பொறுப்பேற்க வேண்டும்; கணவன் நலத் திற்கும் பொறுப்பேற்க வேண்டும். இவை இரண்டி லும் நானும் பங்கு கொண்டு உதவுவேன் தந்தையே.

நீ உதவுவதற்கு ஒன்றுமில்லே மகனே! அதிலும் முதல் பொறுப்பில் உன் உதவி இடம்பெற வகையே @iుడి). பெண்களின் கற்பைக் காக்க ஆண்கள் முனை வது என்று தொடங்கில்ை அது பெண்களைச் சிறையில் அடைத்து வைத்துக் காக்கும் காவலாகத்தான் முடியும். அது நல்லதன்று; வெற்றியும் தராது. பெண்கள் தம் உள்ள நிறைவோடு தாங்களே தங்கள் கற்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு *பெண்கள் தங்க ளது உள்ள கிறைவு என்னும் பண்பால் கற்பைக் காத்துக் கொள்ளும் காப்பே சிறந்தது. அ.தன்றி ஆண்களால் சிறையிட்டுக் தாக்கப்படும் காவல் கற்பு என்ன பயனேத் தரும் என்று நினைக்கிருய் மகனே ?'

இல்லறப் பிளவு என்னும் பயனைத்தான் தரும்:என்ருன் மகன்.

அது மட்டுமோ ! இல்லறத்து இழிவு என்னும் பயனையும் தரும். ஆகவே, பெண்மை தனக்குத்தானே கற்பைக் காத்துக் கொள்ளும் பொறுப்புள்ளவள் என் பதை அறிந்தேன் தந்தையே '-என்ருள் மகள்.

பொறுப்புள்ளது மட்டுமன்று மகளே ; சிறப்புள் ளதுமாகும். சிறப்பு என்ருல் எளிதான சிறப்பு அன்று;

వ్రై

  • சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர்

கிற்ைகாக்கும் காப்பே தலை.

~.ു.ു