பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளுவர் வாழ்த்து

பெருஞ்சிறப்பைப் பெறுவதாகும். அச்சிறப்பும் இவ்வுல கம் எங்கும் பரவி நிற்கும் சிறப்பாகும். தெய்வத்தைத் தொழாத பெண் தெய்வமாகவே சிறப்பிக்கப்படும் அளவு சிறப்புடையவள் ஆவாள். அத்தகைய பெண்ணின், கணவன் அவளைச் சொத்தாகப் பெற்றவன். உலகோர் அவனை இந்தக் கற்புடையாள மனைவியாகப் பெற்ருன் என்று சிறப்பிப்பர். "தம்மை மனைவியாகப் பெற்ற வனைத் தம் உள்ளத்தில் கிறுத்தும் கற்பைப் பெண்டிர் பெற்ருல் அவர்கள் தாம் வாழும் உலகில் மிகப் பெரும் சான்ருேரால் பெரும் சிறப்புச் செய்யப் பெறுவர். -

ஏறுபோல் பீடு நடை

கற்பால் மனைவி பெறும் சிறப்பு இது. அவளது கணவன் பெறுவதோ பெருமிதமான நடை ஆகும். ‘என்ன மகனே, பயன் பெருத பார்வை பார்க்கின்ருய்? - மனைவியின் கற்பால் கிடைப்பது எனக்கு ஒரு நடைதானு, -என்று அலுத்துக் கொள்கிருயா ? -

இல்லை தந்தையே எவ்வாறேனும், எவ்விடத்தி லேனும் இதை விளக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.'

வாழ்க! நடை என்ருல் காலை மாறிமாறி எடுத்து வைப்பதன்று. நடையைப்பற்றி நீ அறிவாயே மகனே! தந்தையே! நடை காலை எடுத்து வைக்கும் தன் மையைப் பொறுத்தது அன்று. உள்ளத்தின் நிலைக் கேற்ப நடையை மதிப்பிட வேண்டும். உள்ளம் தளர்ந்

്ഹാബു ാഹ്യേ

  • பெற்றன் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. -