பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 77

திருப்பின் தலைகவிழ்ந்த நடை அமையும். உள்ளம் நிறைந்திருப்பின் மிடுக்கு நடை அமையும்.'

"ஆம், ஆண் மகனுக்கு உரியது அந்த மிடுக்கு நடை தான். அதனைப் பீடு நடை ' என்பேன் யான். ஆனல், தலை நிமிர்ந்து கை வீசி நடக்கும் நடையெல்லாம் பீடு நடை ஆகிவிடுமா ? வாழ்வில் குற்றங்கள் பல புரிந்து இழிவையே மேற்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர் தம் செயல்களுக்காகத் தாமே நாணம் கொண்டு தலை குனிய வேண்டும். தம் சிறு தவறுக்கும் நாணுபவரே மனிதப் பக்குவம் பெற்றவர் ஆவார். அவரே சான்ருேர் எனப்படுவார். தன் தவற்றை எண்ணித் தானே நாணம் கொள்ளும் தன்மை சான்ருேர்க்கு ஒர் அணிகலன் ஆகும். அது அவர்க்கு ஓர் அழகாக மிளிரும். அந்த அழகைப் பெருமல் தலே நிமிர்ந்து பெருமிதமாக நடப்பின் அந்த தடை பெருமைக்குரிய நடை அன்று ; பிணி நடையே ஆகும்.

சான் ருேர் தமது நிறைந்த பண்பால் பீடு நடை நடப்பர். இல்லறத்து ஆண் மகனுக்கு அமைகின்ற பீடு நடை அவனது செயலாலும், பண்பாலும் மட்டும் அமை வதன்று. அது அவன் கொண்ட இல்லாளால் அமைவ தாகும். இல்லாள் இல்லறப் புகழை விரும்பி ஒழுகுபவ ளாக அமையவேண்டும். அதற்கேற்ற கற்பு மாண்பை உடையவளாக வேண்டும். அத்தகைய இல்லாளைக் கணவன் பெறுதல் வேண்டும். அப்படிப் பெருது போகுல் உலகோர் அவனை இகழாது என்ன செய்வர்? உலகோர் இகழும் இகழ்ச்சியைப் பெற்றவன் உலகில் தலை நிமிர்ந்து நடக்க இயலுமா ? ஆகவே, கணவன் கற்பு நிறைந்த இல்லாளைப் பெறவேண்டும். பெற்ருல் உலகோர் போற்றுவர். அதனுல் பெருமிதத்துடன் தலை