உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களைப் பெறுக!

யாம் அறிந்த பேறு

மக்காள். நீவிர் மக்களைப் பெறுக அறிவு சான்ற மக்களைப் பெறுக ! பழி காணுத மக்களைப் பெறுக ! உங்க ளது செல்வமாக அமையும் மக்களைப் பெறுக மக்களால் அமிழ்தினும் சிறந்த சுவை பெறுக ! உடலின்பம் பெறுக! செவியின்பம் பெறுக பெற்ருேரின் கடமை அறிந்து சிறப்படைக !

மக்காள், மக்கட் பேற்றைப் பற்றிப் பேசப் புகும் போது இவற்றிற்கு மேலும் வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அந்த அளவுக்கு யாம் குழந்தைச் செல்வத்தை மிகப்பெரும் பேருகக் கருதுகின்ருேம். உலகில் மாந்தர் அடைய வேண்டிய பேறுகள் பல. அவையெல்லாம் ஒவ்வொரு வகையில் குறை உடையன. மக்கட்பேறு எவ்வகையிலும் குறை உடையது அன்று. இந்தப் பேறு அழியாது தொடர்ந்து பெருகவல்லது. அப்பெருக்கால் உலகையே ஆக்கம் பெறச் செய்வது.

இத்தகைய பேற்றிலும் ஒரு திருத்தம் உண்டு. பேற்றுக்குப் பெற்ருேம் என்று பெறப்படும் மக்கட்பேறு சிறப்பு உடையது ஆகாது. யாம் மிடுக்கோடு சொல்