பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 81

வேம். அறிய வேண்டியவற்றை அறியும் நுண்ணறிவு வாய்ந்த மக்களைப் பெறுதல்தான் இல்லறத்தார் பெற வேண்டிய பேறு ஆகும். அத்தகைய மக்கட்பேறு அல்லாத பிற எவற்றையும் யாம் பேருகவே மதிப்பதில்லை - என்று உறுதிக் குறிப்போடு கூறினர் தந்தை.

வள்ளுவர் தம் பேச்சில் யாம் என்ற ஈடுபாடான சொல் அமைத்ததைக் கண்ணன் ஏதோ ஒரு புதுமையை அறிந்தவன் போல் நோக்கிளுன். கண்ணம்மா பக்கம் திரும்பினுன்: -

' கண்ணம்மா ! இதுவரை தந்தை உணர்த்திய கருத்துக்களில் ஈடுபாடு காட்டிப் பேசியதை இதில் தானே காண்கின்ருேம்."

கண்ணம்மா ஆம், இப்போதுதான் யாம்' என்ற ஈடுபாடான சொல்லைச் சொல்கிருர்கள்.

ஆம் மக்காள், மக்களது வாழ்வியலுக்காக யான் பலவற்றை விளக்கும் விருப்பம் உடையவன். ஆயினும், இதுபோன்று ஈடுபாட்டோடு யாம் ' என்ற தன்னுரி மைச் சொல்லை அமைத்து மூன்றே செய்திகளைத்தான் குறிப்பேன். ஒன்று இந்த மக்கட்பேறு. மற்றென்று வாய்மை. வேருென்று மாந்தரில் தாழ்ந்த கயவரைப் பற்றியது.'

தந்தையே, தங்களது ஈடுபாட்டைப் பெற்ற இவை மூன்றும் இன்றியமையாது கவனிக்கத் தக்கன என்பதை உணர்கிருேம். அவற்றுள் இதுபோது நாங் கள் மக்கட்பேற்றைப் பெறுவதற்குரிய வாய்ப்பைப் பெற்

S AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS

AASAASAASAASAASAASAASAASAASAASAAMeAAASAASAASAASAA

  • பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.