பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வள்ளுவர் வாழ்த் து

பதை அங்கு நீ செல்ல நேர்ந்தால் கண்டு மகிழலாம். அதைவிட உலகோர்- உன் மகன் ஒரு சான்ருேன்,என்று புகழும்போது உன் உள்ளம் பூரிப்பின் எல்லையை அன்ருே அடையும். அது போன்ற பூரிப்பை நீ அதற்கு முன் கண்டிருக்கவே முடியாது. வேண்டுமானல் குழந் தையைப் பெற்றெடுத்த நேரத்தில் பூரித்திருக்கலாம். ஆல்ை, * தன் மகன் சான்றேன் என்று உலகோர் புகழும் புகழ்மொழியைக் கேட்ட தாய், தான் அவனைப் பெற்ற பொழு தைவிடப் பெரிதும் பூரிப்பாள் அன்ருே மகளே, நீயும் அந்தப் பூரிப்பை அடைவாயாக!

இதுவரை மக்கட்பேற்றின் சிறப்பையும், அப்பேற். ருல் நீங்கள் பெற இருக்கும் இன்பங்களையும், நீங்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும், உங்களுடன் உலகம் அடைய இருக்கும் பயன்களையும் கண்டோம். .

மக்கட்பேற்றின் ஈற்றுச் செய்தியாக ஒன்று உண்டு. மக்களைப் பெற்றுப் பேணி வளர்த்து-அறிவை ஊட்டி வளர்த்து ஆளாக்கி விட்டால் அம்மக்கள் உங்கட்குச் செய்யவேண்டிய கடமையே அது. அக் கடமை ஊரார் தம் பெற்ருேரைக் குறித்துப் புகழுமாறு விளங்குவ தாகும். *இவனைப் பெற்றெடுத்த தந்தை இவன் இங் நிஜலயை அடைய எந்த அளவு முயன்ருனே என்று வியப் போடு சொல்லும் புகழ்ச் சொல்லே உண்டாக்குவதே ஒரு மகன் தன்னை ஆளாக்கிய தந்தைக்குச் செய்யும் கடமை. யாகும். உலகோர் இவன் தந்தையே தந்தை என்று

SAASAASAASAASAASAAASeSeSeSAASAASAAAS :K:షి:RFRR

  • ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனச்

சான்ருேன் எனக்கேட்ட தாய்.

  • மகன்தந்தைக் காற்றும் உதவி, இவன்தங்தை

என்கோற்ருன் கொல்எனும் சொல்.