பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 89

முக்கின்மேல் விரல் வைத்து வியந்து புகழுமாறு கடமை யாற்ற வேண்டும். மக்களே, உங்களது மக்களும் அத் தகைய கடமையை ஆற்றப் பெறுவீர்களாக !!-என்று மக்கட் பேற்றுக்கு முடிவுரை தந்தார் வள்ளுவர்.'

கண்ணன் கண்ணம்மாவுக்காகப் பரிந்து பேசின்ை: தந்தையே, கண்ணம்மாவுக்கு ஒரு குறை உள்ளது போன்று அறிகின்றேன். கற்பதும், அறிவு பெறுவதும் ஆண்களுக்கே உரியவை என்னும் கருத்து மேம்பட்டு நிற்பதாக இவளுக்குத் தோன்றுகிறதோ என்று ஐயப் படுகிறேன்.' . .

கண்ணம்மா சிரித்துக் கொண்டே விளக்கம் தரத் தொடங்கிள்ை : தந்தையே, இவர் வேண்டுமாயின் அவ்வாறு கருதிக்கொண்டு, ஆண்கள் ஒருபடி உயர்ந்த வர்கள் என்று மகிழ்ந்து கொள்ளலாம். பெண்ணில் பெருந்தக்கயாவுள' - வரவு அறிந்து செயல்புரியும் வாழ்க் கைத்துணை- இல்லத்துக்கு மாண்பு தருபவள்'-என்று தாங்கள் சிறப்பித்ததைக் கேட்ட எனக்கு இவர் என்னிடம் தோன்றுவதாகக் கூறிய குறை எழவில்லை. சில இடங்களில்- தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி'தன் மகனச் சான்ருேன் எனக்கேட்ட!-மகன் தந் தைக்கு என்று தாங்கள் குறித்தது அவ்வாறு அவரை எண்ணத் துாண்டியுள்ளது. ஆளுல் தாங்கள் குறித்த மக்கட்பேறு என்ற தொடரில் அமைந்த மக்கள் என்ற சொல் ஆணையும் பெண்ணையும் அடக்கியதன்ருே ! அதுபோன்றே-அறிவறிந்த மக்கள் - பண்புடை மக் கள் -தம் மக்கள் அறிவுடைமை -என்று கூறப்பட் டவை எல்லாம் ஆண் மகனையும், பெண்மகளேயும் இணைத்தே கூறப்பட்டவை தானே. அவை கொண்டே கல்விக்கும், அறிவிற்கும் பெண்களும், ஆண்கள்

வ. வா-6.