பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வள்ளுவர் வாழ்த்து

போன்றே தகுதி படைத்தவர்கள் என்பதை உணர லாம். மேலும் ஆணுேடு பெண் இயைபு கொண்டவள். ஆயினும் பெண்கள் இல்லத்து எல்லைக்குள் அதிகம் வாழ்பவர்கள். ஆண்கள் புற உலகிலும் உலவும் வாய்ப் பில் அமைந்தவர்கள். ஆகவே, பெரும் பகுதி கருதியே சில இடங்களில் மகன்' என்று குறித்துள்ள தங்கள் கருத்தையும் குறிப்பாக உணர்ந்து கொண்டேன். ஆகவே, அவர் என் குறையாகக் குறித்தது என்னிடம் இல்லை தந்தையே."

மக்காள், உங்களது குறிப்பறியும் நுண்ணறிவை அறிந்து மகிழ்கிறேன். இனி யான் அறிவுறுத்தும் கருத் துரைகளையும் குறிப்பாகவே அறிவுறுத்துவது உங்க ளுக்குப் பொருந்துவதாகும். வாழ்க நீவிர் என்னைச் சந்தித்த இரண்டாவது நாளிலிருந்து இதுவரை நீங் கள் பெற்ற கருத்துரைகள் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் தொடர்பு பற்றியவை. இனி நாளை முதல் உலகோராக, உங்களைச் சூழ உள்ள புறத்தாரிடம் கடைப் பிடிக்க வேண்டிய பண்புகளையும், செயல்களையும் தனித் தனியே அறிவோம். அவை, அன்பு உடைமை, விருந்தினரைப் போற்றுதல், இனியவை கூறல், செய்த நன்றியை அறிதல், நடுநிலைமை கொள்தல், அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல்லாளை விரும் :ாமை, பொறுமை உடைமை, பொருமை இல்லாமை, பிறர் பொருளைக் கவராமை, புறம் கூருமை, பயனில் லாதவற்றைச் சொல்லாமை, தீய வினைக்கு அச்சம், ஒப் புரவு அறிதல், ஈகை, இல்லறத்தின் முடியாகிய புகழ் ஆகியன ஆகும்.

செல்க ! வருக !