பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு கொள்க!

துளிக்கண்ணிர் தூற்றும்

கண்ணு-கண்ணம்மா, காலைப் பொழுதிலேயே இன்று உங்களைக் காண்கின்றேனே அளவளாவிப் பேசிய வாறே வருவதைக் கண்டு மிக மகிழ்கிறேன். உங் களது மகிழ்ச்சியான உரையாடலுக்கு ஏதேனும் அடிப் படை நிகழ்ச்சி உண்டோ ?”

" உண்டு தந்தையே. நான் கண்ட ஒரு புதுமை தான் அது. என் வீட்டிற்கு எதிரில் ஒரு தாத்தா இருக் கிரு.ர். அவர் ஒரு வியப்பான மனிதர். எவருடனும் பழகமாட்டார். அவரது முகத்தில் மகிழ்ச்சியின் அறி குறியையோ, வாட்டத்தின் அறிகுறியையோ நான் கண்டதில்லை. அவர் வீட்டு நாய் ஒன்று என் வீட்டுக்கு உணவுக்காக வரும். நேற்று அது வரவில்லை. இன்று விடியலில் அவரைப் பார்த்த நான் ' எங்கே தாத்தா நாயைக் காணுேம் ' என்றேன். பதில் சொல்லாமல் சிறிது நேரம் நின்ருர். அவர் முகத்தில் எந்த அறிகுறி யும் இல்லை. எப்பொழுதும் போலவே இருந்தது அவர் முகம். சிறிது நேரம் சென்றது. ஆம் தம்பி, அது நேற்றுக் காலை செத்துவிட்டது என்ருர். அவர் குரலில் எவ்வித மாறுதலும் இல்லை. ஆணுல் அவரது கண் ஒரத்தில் ஒரு துளிக் கண்ணீர் அவரையும் மீறித்