பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வள்ளுவர் வாழ்த்து

துளித்தது. அந்த நேரத்தில் அவரது முகம் சிறிதளவு மாறிச் சுளித்தது. அந்தக் கண்ணிரை அடக்க முயன்று அவர் தோற்றிருக்கிருர் என்பதைக் காட்டிற்று முகச் சுளிப்பு. அந்த நிலையைக் கண்ணம்மாவிடம் சொல்லிக் கொண்டு வந்தேன்."

'மகனே, அதுதான் அன்பு எனப்படுவது. பார்த் தாயா அந்த முதியவரின் அன்பை அவர் அதை அடைத்து வைக்க முயன்றிருக்கிருர். ‘அன்பிற்கும் தடைபோட்டு அடைத்து வைக்கும் தடைக்கட்டை உண்டோ: அன்பால் விளைந்த ஆர்வத்தை உடையவரது துளிக்கண் fைரே அவரது அன்பைப் பலர்க்கும் வெளிப்படுத்தி விடும், துளிக் கண் ணிரே போதும்; இவர் அன்புடையவர்அன்புடையவர் என்று உலகோரிடம் துாற்றிவிடுமே.

உயிரைப் பிணிக்கும் கயிறு

மகனே, அன்பு மறைத்து வைக்க இயலாதது. வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு வெளிப்பட்டுத் தம் மோடு தொடர்பு கொண்டவர் மேல் செல்லும் தன் மையை உடையது. இந்த இரண்டு நாட்களில் அந்த அன்பால் எந்த அளவு பிணைக்கப்பட்டுள்ளிர்கள் என் பதை நீங்களே அறிவீர்களே ! உங்களிடையே இல்ல றப் பிணைப்புக் கயிருக விளங்கும் அன்பு, குழந்தைகள் மேல் பரவி, வளர்ந்து சிறப்பது. உற்ருர் மேலும், உல கோர் மேலும், உயிர்கள் மேலும் பரவி, எங்கும் நிறைந்து நிற்கும் பெரிய உருவை உடையது.

அன்பிற்கும் உண்டே அடைக்குக்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்.