பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தோற்ருலும் தொடர்வேன் !

  1. = o l-ñ

உலகப் புகழ்பெற்ற வீரர்களாக இருந்தாலும், ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ருல், நடத்தப் படுகின்ற தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், திறமையைக் காட்ட வேண்டும், வகுத்திருக்கும் தகுதிக்கு மேலே வந்தாக வேண்டும் என்பது மரபு. அந்த மரபுப்படி, 1948ஆம் ஆண்டு இலண்டன் மாநகரத்தில் நடக்கவிருந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கான வீரர்களின் தே ர் வா ன து, அமெரிக்காவிலே நடைபெற்றது.

ஜெகம் புகழும் வீரன், ஜெசி ஒவன்ஸ் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன்’ என்று பெருமை பேசிக்கொண்டாலும், இதுவரை உயரத்தடைதாண்டும் 110 மீட்டர் போட்டியில் (High Hurdle) 82 தடவைக்குமேல் வெற்றி பெற்று பலமுறை உலகசாதனை செய்திருக்கிறேன். இதுவரை என்னைப்போல் யாருமில்லை, என்று புகழ்ந்து கொண்டாலும், அந்த வீரனும் வந்து கலந்து கொண்டாக வேண்டும்’ என்ற கட்டாய நிலை யிலே அவனும் வந்திருந்தான்.

என்னைத்தான் உ ங் க ளு க் குத் தெரியுமே, நான் ஏன் தேர்வுக்கு வரவேண்டும், என்று அவனும் கூறவில்லை. கூறி யிருந்தாலும் அதை அனுமதிக்கத் தேர்வுக் குழுவினரும் தயாராக இல்லை. பயிற்சி முகாமுக்கு வ ரா த வ ர் க ளே