பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எஸ். நவராஜ் செல்லையா

வாவென்று வ ற் பு று த் தி அழைப்புக் கொடுத்தும், வராத பொழுது சேர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு விடுத்தும், விடுத்த மறுநாளே அவர்களை சேர்த்துக்கொண்டும் வெளி நாட்டுப் பயணம் போகின்ற நம்நாட்டு மரபுகளையும் அவ் வப்போது பார்த்திருக்கிருேம். ஆலுைம், அ ந் த த் தே ர்வு முறை, மிகவும் கடுமையான விதிமுறைகளுடனே அங்கே நடத்தப்பெற்றது.

பால்ட்வின் வாலஸ் என்னும் கல்லூரி மாணவனை அவனது பெயர் ஹேரிசன் தில்லார்டு (Harrison Dillard) என்பதாகும். எலும்பும் தோலுமாகத் தோற்றமளித்து ஒல்லி யாக அவன் இருந்ததால் Bony Dillard என்றும் செல்லமான பட்டப் பயருடன் அ னை வ ரா லு ம் அழைக்கப்படுவதும் உண்டு.

‘இவனுக்கு முன்னே தடைதாண்டும் போட்டியில் இது வரையில் யாரும் ஒடியதில்லை என்ற புகழ்மாலை சூடியிருந்த ஹேரிசன், தேர்வுக்கு வந்திருக்கிருன் என்பதையறிந்து, தைரியமாக வந்தவர்கள் பலர் என்ருலும், தேர்வு பெறுவோம் என்ற நம்பிக்கை சிறிதும் இன்றியே கலந்து கொண்டார்கள்.

'மனிதன் நினைக்கிருன். இறைவன் அழிக்கிருன் என்ற முதுமொழிபோல, தி ல் ல ார் டு நினைத்தது நடக்கவில்லை. போட்டியிடும் மற்ற வீரர்கள் மருண்டது போல அங்கு நடக்கவில்லை. எவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்ச்சி அந் நாளிலே நடந்தபோது, அனைவருமே அதிர்ச்சிக்கு ஆளா யினர். 'இப்படியும் நடக்குமா என்று மடிமீது இடி விழுந்த நிலைபோல மயங்கி நின்றனர்.

ஒலிம்பிக் பந்தயத்திலேயே தங்கப்பதக்கம் பெறும்வீரன் என்று அமெரிக்கர்கள் மட்டுமல்ல, அகில உலகத்தினரே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வீரனை தில்லார்டு, 1.10 மீட்டர் தடை தாண்டும் போட்டி .ெ த ா ட ங் கி ஒடத் தொடங்கியவுடன், முதல் தடையைத் துரண்டி ன்ை. இரண்டாம் தடையில் இடித்துக் கொண்டான்.