பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கலங்காத கரிகாலன் !

o _ *

இணைபிரியாத சகோதரர்கள் அவர்கள். அபூர்வ சகோத ரர்கள் என்று அழைக்கப்படாவிட்டாலும், அன்புச்சகோத ரர்கள் என்று பலராலும் பாராட்டப்பட்டவர்கள். கல்விக் காக எந்தக் கஷ்டமும் படலாம் என்று நமது முன்னேர்கள் கூறியிருப்பது போல அந்தச்சிறுவர்களான சகோதரர்களும் வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் இல்லையென்பதால், தினமும் மூன்று மைல் தூரம் நடந்து சென்று, படித்து விட்டுத் திரும்பக்கூடிய சூழ்நிலையில் சென்று வந்தார்கள்.

காலையிலும் மாலையிலும் வீ ட் டு க்கும் ப ள் வரி க் கு ம் இடையே மூன்று மைல் தூரம் நடக்கவேண்டிய நிலையை, அவர்கள் ஒடியே சென்று விடுவார்கள் என்ருல், அவர் களுடைய சுறுசுறுப்பான தேகத்தையும் மனேவேக நிலையை யும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஒட்டத்திற்கும் நடைக்கும் இடையே விளையாட்டுக்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடந்து கொண்டே யிருக்கும். இவ்வாறு அதிக தூரத்தைத் தங்கள் வேடிக்கை யான விளையாட்டு நி க ழ் ச் சி க ள ா ல் மறந்து படித்துக் கொண்டு வரும் நாட்களில் ஒர் நாள்!

சிறுவர்கள் இருவரும் அமெரிக்காவில் எல்கார்ட் என்னு மிடத்தில் பிறந்தவர்கள். மூத்தவன் பெயர் ஃபிளாய்டு.