பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 23

கடுமையாக்கிக் கொண்டுமல்ல, மனத்தைக் க ல் ல ா க் கிக் கொண்டும் ஒடினன்.

ஒடத் தொடங்கில்ை நிறுத்தமுடியாது என்பது போல ஒடிப் பழகிக் கொண்டேயிருந்தான். 1912ம் ஆண் டி ல் தொடங்கி 1916ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ளத் தயாராக இருந்தான். ஆல்ை விதி அவனுக்கு வேறு விதமாக விளையாட்டுக் காட்டியது. முதல் உலகப் போரின் காரணமாக ஒலிம்பிக் பந்தயம் நடைபெருமல் போயிற்று. பத்தொன்பது வயது இளைஞனை அவன் முயற் பியும் லட்சியமும் பாழ்பட்டுப் போனதுபோல தொடக்கத் திலேயே நின்று விட்டது, இன்னும் நான்கு ஆண்டுகள் அவன் காத்திருக்க வேண்டுமே!

வீர இளைஞன் மனத்தைத் தளர விடவில்லை. ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெறும்வரை விடமாட்டேன் என்று வீராவேசத்துடன் கூறினன். மீண்டும் ஒட்டப்பயிற்சியைத் தொடர்ந்தான். இளமையின் எழுச்சியிலே நின்றவனுக்கு 23 வயது ஆகின்ற போது 1920ம் ஆண்டு ஆண்ட்வெர்ப் எனும் இடத்தில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்குச்சென்ருன்.

முதல் போட்டி 5000 மீட்டர், அதில் முதலில் வர முடியாமல் தோற்று இரண்டாம் இடத்தையே அடைந் தான். அது பெரிய ஏமாற்றமாக அ மை ந் த து. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்களே அதுபோல அந்தத் தோல்வியை கெட்ட சகுனமாக அவ்வீரன் எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து நடக்கும் 10,000 மீட்டர் போட்டி யில் வெற்றியே பெறுவேன் என்று அஞ்சா நெஞ்சுடன் அயரா உறுதியுடன் ஒடி வெற்றிபெற்ருன். அந்த முதல் தோல்வியே அவனுக்கு கடைசித் தோல்வியாகிவிட்டது.

அதாவது அவனது எட்டு ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயப் போட்டியில் தோற்றது அதுவே முதலும் கடைசியுமாகும்.

நிமிர்ந்தவாறு ஒடுகின்ற ஒட்ட அமைப்பு, ஒட்டம் தொடங்கிவிட்டால் ஆரம்பம்போலவே கடைசிவரை