பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. தணியாத தாகம்

“ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள். இனி உலக அரங்கில் நடக்கும் ஒடுகளப் போட்டிகளில் அவளால் கலந்து கொள்ள முடியாது. முன்போலத் தாண்டவும் முடியாது. வெற்றி பெறவும் முடியாது” என்று விளையாட்டு வல்லுநர் களும் சரி, மற்ற போட்டியாளர்களும் முடிவு கட்டிக் கொண் டிருந்த நேரத்தில், முகில் விட்டுத் தோன்றிய முழு நிலவென, இருந்த குகைவிட்டுக் கிளம்பிய பெண் புலியென வந்து நின்ருள் அந்த வீராங்கனை.

16 வயதில் 6 மீட்டர் 12 செ.மீ. நீளம் (20) தாண்டிக் கொண்டிருந்த அவள் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த போட்டிகளில் நீளத் தாண்டும் போட்டியில் வெற்றிமேல் வெற்றி பெற்று வந்த நிலை அப்பொழுது. நீளத் தாண்டும் போட்டியில் உலக சாதனையை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றி ருப்பவள் (Long lump) என்று கணக்கிடப்பட்டிருந்த நிலை யில், திருமணமும் ஆகி, தாயாகும் தகுதியும் பெற்றுவிட்ட பொழுதுதான், மேற்கூறியவாறுபேசிக்கொண்டிருந்தார்கள்.

தாய்மைப் பேற்றினை அடைந்திருந்த காலத்திலும், தாயாகிவிட்ட நிலையிலும் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த

வ-2