பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் £7

குத் தெய்வமே முன்வந்து துணை நிற்கும், என்பார்களே அதுபோல, அந்த மங்கையின் நினைவு நிஜமாகி விட்டது.

ஆமாம்! மீண்டும் நீளத் தாண்டும் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்குத் தேறிவிட்டாள். தேற்றிவிட்டாள். ரஷ்ய நாட்டில் தேசிய அளவில் நடக்கும் போட்டியில் பங்கு பெற்று, அவள் வெற்றி பெற்று ஏற்படுத்திய சாதனையின் தாரம் 6.மீ. 82 செ.மீ. (22 ;) ஆகும். 1978ஆம் ஆண்டு நிகழ்த்திய அவளது சாதனையானது உலகத்திலே உள்ள நீளத் தாண்டும் போட்டியில் நிகரற்று விளங்கிய வீராங்கனே களுக்குள் பத்தில் ஒருவராக உயர்த்திவிட்டிருந்தது.

இந்த நிலைக்கு வந்துவிட்டோம். இதுவே போதும்’ என்று எண்ணி அமைதி அடைந்துவிடவில்லை. இறுமாந்து போகவும் இல்லை. பத்தில் ஒருவராக இருப்பதா? அதற் குப் பதிலாக, 'இவள் ஒருத்தி தான் என்று முதற்படியில் நிற்க வேண்டாமா? என்ற எண்ணமே அவளே வேகப்படுத் தியது. மனதிலே எழுச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தன் பயிற்சியைச் செய்தாள்.

அடுத்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட வேண்டும் என்று தணியாத முயற்சியில் உழைத்து, ஒரு மனதுடன் பயிற்சி செய்து, உற்சாகத்துடன் பங்குபெறச் சென்ற வேளையில் தான், உண்மையான உழைப்பானது எவ்வாறு ஒருவரை உலகத்தில் உயர்த்திக் காட்டும் என்ற உண்மையை அவள் உணர்ந்தாள். உலகமும் உணர்ந்து கொண்டது.

சற்றுதுாரம் அதிகமாகத் தாண்டலாம் என்ற நினைவுடன் தாண்டியபோது, அவள் தாண்டி முடித்த தூரத்தை அளந்த வுடன் அவளாலே நம்ப முடியவில்லை. மற்றவர்கள் நிலையும் அப்படித்தான் இருந்தது. 7 மீட்டர் 0.7 செ.மீ. (23.23’) தாண்டி உலக சாதனையையே நிகழ்த்தி விட்டாள். அது மட்டுமல்ல. 7 மீ தூரத்தை முதலில் தாண்டிய வீராங்கனே