பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கெடுத்தாலு கெடமாட்டேன்!

ஏழைக் குடும்பம் ஒன்றில் ஏழு குழந்தைகளில் ஒருவ முகைத் தோன்றிய ஜெசி ஒவன்ஸ் எனும் வீரனை, இவனைப் போல் யாரும் பிறக்கப் போவதில்லை என்று எல்லோரும் அதாவது எதிர்த்தவர்கள் உட்பட ஏற்றுப் போற்றிப் பாராட்டினர்கள் என்ருல், உலகவீரர்களுக்கிடையே உன்னத இடத்தை வகித்துத் துருவ நட்சத்திரம் போலத் திகழ் ன்ெமுன் என்ருல், அது குருட்டு அதிர்ஷ்டத்தால் அவனுக்கு வந்த புகழ் அல்ல! உண்மையான உழைப்பின் உரிமை நிறைந்த வெற்றி தந்த பெரும் புகழாகும்.

பிறந்த ஊரான அலபாமா எனும் இடத்தில் வாழ வழி யில்லாத காரணத்தால், அமெரிக்க நாட்டின் ஒகியோ எனும் மாகாணத்தில் உள்ள இடத்திற்கு வேலைதேடிப்போன தந்தை யுடன், ஒவன்சும் வந்து சேர்ந்தான். ஒன்பதாவது வயதில் ஊர் மாறி வந்தாலும், உடன் தொடர்ந்த வறுமையும் வாட்டமும் அவனது குடும்பத்தை விட்டபாடில்லை. அவர் களும் வறுமையை விரட்டியபாடில்லை.

'கற்கை நன்றே....பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று அவ்வை பாடினுள். அவ்வுரையானது அமெரிக்கா விலும் பொருந்தியிருக்கிறது பாருங்களேன். வறுமையில்