பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 3.3

தன்னை எப்படியும் கெடுத்து, விளையாட்டுத் துறையிலிருந்து விரட்டிவிடவேண்டும் என்று வஞ்சகமாக சூழ்ச்சி செய்து கொண்டிருப்பவர்களை அடையாளம் புரிந்துகொண்டிருந் தாலும், அடிக்கடி நடைபெறுகின்ற இது போன்ற நிகழ்ச்சி களே சகித்துக்கொள்ள முடியாதவனுகவும் இருந்தான். என்ன இருந்தாலும் 21 வயது இளைஞன் தானே! எதிர்ப் புக்களை சமாளிக்கலாம். ஆனல் எவ்வளவுதான் சமா ளிப்பது?

படுக்கையில் பாம்பைப் போட்ட பாவியை யார் என்று புரிந்துகொண்டவுடன், பதிலுக்கு பதில் ஏதாவது செய்து விடவேண்டும் என்ற வேகத்தில், காகிதப்பை ஒன்றில் தண் ணிரை நிரப்பிக்கொண்டு, அவனை அடிக்கவேண்டும் என்ற வெறியில், மாடிப்படி இறங்கி ஓடினன் ஓவன்ஸ். அடிவாங்க இருந்தவனின் அதிர்ஷ்டமோ அல்லது ஒவன்ஸின் கெட்ட நேரமோ தெரியவில்லை, தண்ணிர் சிந்தியதால் மாடிப்படி வழுக்கி, புரண்டுபோய்க் கீழே விழுந்தான் ஓவன்ஸ். யாரும் கீழே விழுந்ததைப் பார்க்கவில்லை என்ருலும் அடி எதுவும் அதிகமாக இல்லாமல் தப்பித்துக்கொண்டான். ஆளுலுைம் , அந்த அபாயப் பிடியிலிருந்து அவனுல் தப்ப முடியவில்லை.

கோபம் அடங்கி, பின் மேல் மாடிக்குச் சென்று, தன் அறைக்குள் புகுந்து உறங்கியும் விட்டான். ஒரு வாரகாலம் ஆகிவிட்டபோதும், கீழே விழுந்த அடியின் வேகம் வெளி வராமல், உள்ளுக்குள்ளேயே கிளர்ந்தெழுந்ததை ஒவன்ஸ் கவனிக்கவில்லை. உறுத்தல் அதிகமாக இல்லை போலும்,

அடுத்த வாரம் நடக்கவிருந்த போட்டிகளில் கண்ணுங் கருத்துமாக ஈடுபட்டான்: பல்கலைக்கழகப் போட்டிகளில் உயரத்தடை தாண்டும் போட்டியில் (Hurdles) பங்குபெற்ற பொழுதுதான், முதுகில் வலி இருப்பது தெரியவந்தது. அது கொஞ்சங் கொஞ்சமாக இறுகிக்கொண்டும் அவனது முதுகுப் புறத்தை இறுக்கிக்கொண்டும் வந்தது. குளித்தால் சரியாகப் போகும் என்று நினைத்துப்போய்குளித்தவுடன், அது மீண்டும்