பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 39

போனல் போகட்டும். நல்லது தானே, இவன் தவறி ழைத்துத் தோற்ருல் நாம் வெற்றியடைந்து விடலாம்’ என்று அவன் ஒவன்சின் துன்ப நிலையில் இன்பங் காண நினைக்கவில்லை. அதற்குமாருக, அவன் ஒவன்சுக்கு உதவி செய்ய நினைத்தான். அவனுடைய ஜெர்மன்மொழி, இருவருக் கும் இடையே குறுக்கே நிற்கவில்லே அன்புதான் அகிலத்தை இணைக்கும் இன்ப மொழி ஆயிற்றே! அவன் அருகில் சென்ருன் தாண்டும் தூரத்தை அளந்து கொள்ள அளக்கும் நாடாவைப் (Tape) பிடித்துக் கொண்டான். அன்புச் செய்கை அங்கே இன்பமொழியாக உலா வந்தது. ஒடிவந்து தாண்டுகின்ற இடத்தில், ஒவன்சின் வியர்வை படிந்த சட்டையைக் கொண்டு போய் அடையாளம் வைத்தான். இந்த நிலையில்தான், தன் பயிற்சியாளரிடம் ஓடிவந்து, நான் செய்வதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டுப் போனன். தாண்டும் இடத்தில் கால் வைத்துத் தாண்டினல் தானே அவர்கள் தவறு' என்று கூறுவார்கள்!

ஆகவே மூன்றுவது முறை, தாண்டுவதற்காகத் தன் பெயரை அழைத்த போது ஒடிய ஒவன்ஸ், ஒரடி தூரம் தாண்டுமிடத்திலிருந்து பின்னல் வைத்துத் தாண்டினன். அது சரியான தாண்டல் என்று சைகை வந்தது. பயிற்சி யாளர் நீண்ட பெருமூச்செறிந்தார். நிம்மதியாகத்தான். எவ்வளவு தூரம் தாண்டினன் என்பதை அதிகாரிகள் அளந்தார்கள். தாண்டுவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்ற அறிவிப்பும் பிறகு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து 5வது தாண்டும் வாய்ப்பில், ஜெசி ஒவன்ஸ், முதலாவதாக வந்து வெற்றி பெற்றதோடு அல் லாமல், உலக சாதனையையும் நிகழ்த்தின்ை. அந்த தூரம் 26 அடி 5 அங்குலமாகும். அந்த சாதனையானது ஏறத்தாழ இருபத்திநான்கு ஆண்டுகள் ஒலிம்பிக்சாதனையாகவும்விளங்கி நின்றது, 1960ஆம் ஆண்டு , ரால்ப் பாஸ்டன் எனும் அமெரிக்கா நீக்ரோ வீரன் தான் அந்த சாதனையை

முறியடித்தான்.