பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 41

ஒய்ந்து போய் விடவும் இல்லை. மேலும் பல சாதனைகளை செய்து காட்டினன்.

மோட்டார், லாரி வேகத்திற்கு இணையாக ஒடினன். நாய்களின் வேகத்தையும் மிஞ்சும் வகையில் ஒடிஞ்ன். ஹவான எனும் இடத்தில், பந்தயக் குதிரையுடன் போட்டி இட்டு ஒடி வென்று காட்டினன் என்ருல் அம்மாவீரனின் ஒட்ட வேகம் தான் என்னே! அமெரிக்காவில் மட்டுமல்லாது, பிரான்சு, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஒடிக்காட்டிஅற்புத சாதனைகளை நிகழ்த்தினன். 1936ல் பெர்லின் நகரில் ஒலிம்பிக் சாதனை நிகழ்த்திய விரன், 1951 ஆம் ஆண்டு அங்கே மீண்டும் தோன்றினன். அமெரிக்க தூதரகம் அந்த விழாவை நடத்திக் காட்டியது. 75,000 மக்களுக்கு மேல் ஜெர்மானியர்கள் பார்வையாளர் களாக இருக்கையில் அமர்ந்திருக்க, விளையாட்டு உடையுடன் ஜெசி ஒவன்ஸ், ஒயிலாக ஒடி வந்தபோது, அந்த 75,000க்கு மேற்பட்ட பார்வையாளர்களும் ரசிகர்களும் மரியாதையுடன் எழுந்து நின்று கையொலி எழுப்பி, ஆரவாரம் செய்து அக மகிழ்ச்சியுடன் வரவேற்ருர்கள். வயதானலும் உடலை வைத்திருந்த அழகும், அதே சக்தியையும் திறமையையும் போற்றி காத்து வைத்திருந்த பாங்கையும் கண்டு, நாடே போற்றியது.

உலக மகாவீரனக மலர்ந்த ஜெசி ஒவன்ஸ், ஏழை குடும் பத்திலே தோன்றியவன். அன்ருட உணவுக்கும் உடைக்கும் ஆளாய் பறந்தவன். நீக்ரோ இனம் என்ற நிலையில் நெட்டித் தள்ளப்பட்ட போதும், வறுமையால் வதங்கிய போதும் தன் லட்சியத்தைக் கைவிடவில்லை. பிறர் கெடுப்பதை அறிந்தும் அவர்களைக் கெடுக்க நினைக்கவில்லை. மாருக தன் இலட்சியத்தை வளர்த்துக்கொண்டான். லட்சியப் பிடிப்பை வளர்த்துக் கொண்டான். பயிற்சியில் தன்னைக் கலந்தான். வாழ்க்கையில் உயர்ந்தான். இன்று வானளாவிய புகழில் வான் நட்சத்திரமாக உலக அரங்கில் மின்னித் திகழ்கிருன். ஜெசி ஒவன்ஸ் நமக்கெல்லாம் வழிகாட்டும் நல்ல துருவ நட்சத்திரம் அல்லவோ!

வ-3 *