பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 4 3

துக் கொண்டு, தொல்லைதான் என்ருலும், துயர்தான் என்ரு லும், இளமையின் எழுச்சியை மாற்றிக் கொள்ள முடியாத சோதனைதான் என்ருலும், அத்தனையையும் த ா ன் கொண்ட லட்சியத்தின் முன்னே போட்டு விட்டு, உழைப்பே உண்மையான இ ன் ப ம்’ என்ற உயர்ந்த நெறியில், பயிற்சி செய்த பண்பாளன் போர்க், நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அல்லவா விளங்குகிருன்!

ஸ்வீடன் தேசத்தில் உள்ள சோடர்டால்ஜ எனும் நகரில் தோன்றிய போர்க், தன் பெற்ருேர்க்கு ஒரே செல்ல மகன் அவன் தந்தையோ மேசைப் பந்தாட்டத்தில் சிறந்த வீரர். அவர் பெற்ற பெரிய வெற்றிகள் பல உண்டு.அரிய பரிசுகளும் நிறைய உண்டு. அவற்றில் ஒன்று அவர் பெற்ற டென்னிஸ் மட்டையும். அந்த டென்னிஸ் மட்டையை தன் பிரிய மகனுக் குப் பரிசாக அளிக்கிருர். மட்டையைப் பெற்ற போர்க், பொம்மை கிடைத்த குழந்தையைப் போல போற்றி மகிழ்கிருன்.

டென்னிஸ் மட்டையுடன், தந்தையும் மகனும், விளையாட வேண்டும் என்ற விருப்பத்துடன், டென்னிஸ் சங்கம் ஒன்றுக்குப் போகின்றனர். அவர்களுக்கு அங்கே இடம் இல்லை என்று ஒதுக்கப்படுகின்றனர். முதல் ஆசையே இப்படி அவமானத்தில் முடிந்து போனதென்று தந்தையும் மகனும் நொந்து போய் விடவில்லை. அந்த வேதனையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு, வீட்டிற்கு வருகின்றனர்

ஒன்பது வயதினன் போர்க்கின் டென்னிஸ் ஆட்டம் . அவன் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தின் வெளிச் சுவற்றில் தொடங்குகிறது.சுவற்றில் பந்தை அடித்துஅடித்து ஆடுகின்ற முதல் பயிற்சியை அவனே ஆரம்பித்துக் கொள்கிருன். அந்த ஆசையும் மகிழ்ச்சியும் ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ உச்சக் கட்டத்தில் எழுந்து, பின் ஒரு நாளி ல் ஆடிஅடங்கி அமிழ்ந்துபோய் விடவில்லை. காலையில் தொடங்கிவிட்டால் இருள் கவிழ்கின்ற நேரம் வரை, பந்தை சுவற்றில் அடித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்த சி று வ னே, அவனது